அரசுடைமையாகிறது எஸ்எம்ஆர்டிசொத்து

நான்கு ஆண்­டு­கால பேச்­சு­வார்த்தைகளுக்­குப் பிறகு சிங்கப்­பூர் அர­சாங்க­மும் ரயில் வண்­டி­களை இயக்­கி­வ­ரும் எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­ன­மும் புதிய ரயில் நிதிக் கட்டமைப்புக்கு மாறுவது குறித்­த உடன்­பாட்­டுக்கு வந்­துள்­ளன. அக்­டோ­பர் மாதம் முதல் தேதி­யி­லி­ருந்து நடப்­புக்கு வர­வுள்ள இந்தப் புதிய கட்டமைப்பின்­படி எஸ்­எம்­ஆர்­டி­ யி­ட­மி­ருந்து அனைத்து செயல் ­பாட்டு சொத்­து­களை­யும் சுமார் $1 பில்லியனுக்கு அர­சாங்கம் வாங்க இ­ருக்­கிறது.

ரயில் சேவையைச் செயல் ­படுத்­து­வதற்­கான உரி­மத்­துக்கு ஆண்டு அடிப்­படை­யில் எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னம் கட்­ட­ணம் செலுத்­தும். புதிய கட்டமைப்பின்­படி கடுமை­யான பரா­ம­ரிப்பு நட­வ­டிக்கை­களை மேற்­கொள்­ள­வும் சேவைத் தரத்தை உயர்த்­த­வும் ரயில்­களை இயக்­கும் நிறு­வ­னம் ஒப்­பு­தல் அளிக்­கும். விதி­முறை­கள் மீறப்­பட்­டால் தற்போது இருப்­பதை­விட கூடுதல் அப­ரா­தம் விதிக்­கப்­படும். "தேவைக்­கேற்ப அதிக ரயில் ­களைச் சேவையில் இணைப்­பது, ஏற்­கெ­னவே இருக்­கும் ரயில் சேவை தொடர்­பான சொத்­து­களை மேம்படுத்­து­வது போன்ற­வற்றை நிலப்­போக்­கு­வ­ரத்து ஆணையம் குறித்த நேரத்­தில் மேற்­கொள்­ளும்.

இதன் வழியாக நம்ப­க­மான ரயில் சேவை கிடைப்­ப­து­டன் கூட்ட நெரி­ச­லும் குறையும்," எனப் புதிய ரயில் நிதிக் கட் டமைப்பினால் பய­ணி­கள் பெறும் நலன்கள் குறித்து உள்கட் டமைப்புக்கான ஒருங்­கிணைப்பு, போக்­கு­வ­ரத்து அமைச்­சர் கோ பூன் வான் கூறியுள்ளார்.

"உயர்­ த­ரத்­தி­லான, நம்ப­க­மான, பாது­காப்­பான சேவை வழங்­கு­ம் நோக்கில் எஸ்எம் ஆர்டி ரயில் நிறு­வ­னம் செயல்­பட இந்த மாற்­றங்கள் அனு­ம­திக்­கும்," என எஸ்எம்ஆர்­டி­யின் தலைவ­ரும் குழுமத் தலைமை நிர்வாக அதி­கா­ரி­யு­மான டெஸ்­மண்ட் குவெக் குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!