துருக்கியில் ரத்தக்களறி

துருக்கியில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென்று ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையில் ராணுவம் இறங்கியது. இருப்பினும் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டதாக அதி பர் தயிப் எர்டொகன் அறிவித் தார். ராணுவப் புரட்சிக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கியுள்ள தாகவும் அவர் தமது 'டுவிட்டர்' செய்தியில் -குறிப்பிட்டார். முன்னதாக தமது ஆதரவாளர் கள் மத்தியில் உரையாற்றிய அவர் அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் நீடிக்கிறது என்றார். புரட்சியில் ஈடுபட்ட ராணுவத் தளபதியின் நிலை என்னவென்று தெரியாததால் உமிட் டண்டார் என்பவர் தற்காலிகத் தளபதியாக உடனடியாக அறிவிக்கப்பட்டார்.

ராணுவத்தினரின் கலகம் தொடர்பாக 90 பேர் மாண்டுவிட்ட தாகவும் அவர்களில் பொதுமக் களில் 47 பேரும் போலிசில் 41 பேரும் அடங்குவதாக புதிய தளபதி தொலைக்காட்சி மூலம் அறி வித்தார். மேலும் 1,440 பேர் காயங் களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் பட்டியலிட்டார். இது நேற்று மாலை வரையிலான நிலவரம். தொடர்ந்து, மேம்பட்டு வரும் நிலவரத்தை விளக்கிய துருக்கி பிரதமர் பினாலி யில்டிரிம், ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை தொடர்பாக 161 பேர் கொல்லப் பட்டுவிட்டதாகவும் 2,839 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாகவும் கூறினார்.

இந்நிலையில், ஆயுதங்களற்ற நிலையில் சமார் 200 ராணு வத்தினர் தலைநகர் அங்காராவில் உள்ள ராணுவத் தலைமையகத் தில் சரணடைந்த காட்சியை அர சாங்கத் தொலைக்காட்சி ஒளி பரப்பியது. அரசாங்கப் படையினர் 2,800க்கு மேற்பட்ட ராணுவ வீரர் களைக் கைது செய்தனர். சரணடைந்த 200 பேரும் இவர்களில் ஒருபகுதியினரா என்று உடனடி யாகத் தெளிவாகவில்லை. கலகத்தில் ஈடுபட்ட ராணு வத்தினரை ஒடுக்க F-16 ரக போர் விமானத்தைப் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தினர்.

துருக்கி அதிபருக்கு ஆதரவு தெரிவித்து வீதிகளில் இறங்கிய மக்கள், ராணுவத்தின் பீரங்கி ஒன்றின் மீது ஏறி நின்று ஆர்ப்பரித்தனர். கலகத்தில் தீக்கிரையான காரின் அருகே அந்தப் பீரங்கி காணப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!