நஜிப்: நல்ல நிர்வாகத்துக்கு மலேசியா முக்கியத்துவம்

1எம்டிபி தொடர்பாக அமெரிக்க நீதித் துறை வழக்கு தொடுத்துள்ளதை அடுத்து, நல்ல நிர்வாகத்துக்கு மலேசியா மிகுந்த முக்கியத்துவம் தருவதாக மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். "இது ஒரு சிவில் வழக்கு, குற்றவியல் வழக்கு அல்ல என்பதை முதலில் தெளிவுபடுத்தவேண்டும். வழக்கு முடிவதற்கு முன்னரே நாம் எந்த முடிவுக்கும் வரமுடியாது. முதலில் உண்மையை நிலைநாட்டவேண்டும். நாங்கள் நல்ல நிர்வாகத்தை வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்," என்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட திரு நஜிப் செய்தியாளர்களிடம் கூறினார்.

1எம்டிபி தொடர்பான அனைத்துலக விசாரணைக்கு மலேசியா முழு ஒத்துழைப்பு தரும் என்றும் திரு நஜிப் தெரிவித்தார். 1எம்டிபி தொடர்பாக அமெரிக்க நீதித் துறை தொடுத்துள்ள வழக்கில் திரு நஜிப்பின் பெயர் பிரதிவாதிப் பட்டியலில் இல்லை. ஆனால் 1எம்டிபியிலிருந்து கையாடப்பட்டதாகக் கூறப்படும் பணத்தைப் பெற்றதாக 'மலேசிய அதிகாரி 1' என்று வர்ணிக்கப்படும் ஒருவர் பிரதிவாதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 1எம்டிபி விவகாரத்தில் தமக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் தாம் குற்றம் ஏதும் புரியவில்லை என்றும் திரு நஜிப் கூறி வருகிறார். கையாடப்பட்ட பணத்தைப் பயன்படுத்தியதாகத் திரு நஜிப் மீது குற்றம் சுமத்தப்படவில்லை என்றபோதிலும் அவருக்கு நெருக்கமானவர்கள் பில்லியன்கணக்கான அமெரிக்க டாலர்களைச் செலவு செய்து விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது, ஆடம்பரச் செலவில் ஈடுபடுவது ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர்.

இந்நிலையில், மலேசியப் பிரதமர் பதவியில் திரு நஜிப் நீடிப்பது குறித்து முடிவெடுக்க பொது வாக்கெடுப்பு நடத்த அந்நாட்டு மக்கள் அரசாங்கத்துக்கு நெருக்குதல் அளிக்கவேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது கோரிக்கை விடுத்துள்ளார். திரு நஜிப் பதவி விலகவேண்டும் என்பதை வலியுறுத்த மலேசியர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தவேண்டும் என்றும் அவர் கூறினார். இதற்கிடையே, 1எம்டிபி தொடர்பாக அமெரிக்கா வழக்கு தொடுத்துள்ளதை அடுத்து, பிரதமர் பதவியிலிருந்து திரு நஜிப் விலகவேண்டும் என்று மலேசியாவின் எதிர்க்கட்சித் தலைவரான திருவாட்டி வான் அசிஸா இஸ்மாயிலும் கேட்டுக்கொண்டுள்ளார். "திரு நஜிப் தமது பதவியைப் பயன்படுத்தி விசாரணைக்கு இடையூறு விளைவிப்பதாகப் பேச்சு எழக்கூடாது என்று மலேசியர்கள் விரும்புகின்றனர் என்று நான் நம்புகிறேன். எனவே திரு நஜிப் பதவி விலக வேண்டும்," என்றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!