தெம்பனிஸ் மையம் மூன்று கட்டங்களாகத் திறப்பு

தெம்பனிஸில் அமையும் சமூக, வாழ்க்கைபாணி மையம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் கட்டம் கட்டமாகத் திறக்கப்பட உள்ளது. சுமார் ஐந்தாண்டுகால மேம் பாட்டுப் பணிகளுக்குப் பின்னர் நேற்றுக் காலை முன்னோட்ட நிகழ்வாக அந்த மையம் பெருத்த ஆரவாரத்துக்கு இடையே திறக் கப்பட்டது. 'Our Tampines Hub' என்னும் இந்த மையம் முன்னைய தெம் பனிஸ் விளையாட்டரங்கம், தெம்பனிஸ் விளையாட்டு மன்றம் ஆகியன இருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய கேளிக்கை நிகழ்ச்சிகளில் கிட்டத்தட்ட 5,000 குடியிருப்பாளர்கள் கலந்துகொண் டனர். அவர்களில் பெரும்பாலா னோர் சிவப்பு, பெள்ளை உடை களில் வந்திருந்தனர். தேசிய தினத்தையொட்டி நாட்டுப்பற்றுப் பாடல்களை அவர்கள் பாடினர். புதிய மையத்தின் முதல் நிகழ்வாக இந்தக் கொண் டாட்டங்கள் அமைவதாக தெம் பனிஸ் குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினரும் சுற்றுப்புற, நீர்வள அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்தார். தேசிய தினத்தையொட்டி இந்த மையத்தின் முன்னோட்டத் திறப்பு நடப்பது பொருத்தமாக உள்ள தென்று அவர் குறிப்பிட்டார்.

வருகிற நவம்பர் மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக் காகத் திறக்கப்படும். உணவு அங்காடி நிலையங்கள், பூப்பந்து விளையாட்டு அரங்கம், குழு விளையாட்டு மன்றம் ஆகிய வற்றைப் பொதுமக்கள் அப்போது பயன்படுத்தத் தொடங்கலாம். இரண்டாவது கட்டத் திறப்பு அடுத்த ஆண்டு மார்ச்சில் நிக ழும். கரவோக்கே இசைக்கூடம் போன்ற வசதிகள் அப்போது பயன்பாட்டுக்கு வரும். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இந்த மையத்தின் வசதிகள் முழுமை யடைந்து திறக்கப்பட்ட பின்னர் தெம்பனிஸ் வட்டாரத்தில் வசிக் கும் சுமார் 200,000 மக்கள் அவற்றை அனுபவித்துப் பயனடை யலாம்.

கேளிக்கை நிகழ்ச்சிகளில் கிட்டத்தட்ட ஐயாயிரம் குடி யிருப்பாளர்கள் கலந்துகொண் டனர். அவர்களில் பலர் சிவப்பு, வெள்ளை உடை யில் வந்திருந்து நாட்டுப்பற்றுப் பாடல்கள் பாடினர். 900 வேலைகளுக்கான வேலைச் சந்தை யும் நடந்தது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இந்த மையம் முழுமையாகத் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது. படம்: பெரித்தா ஹரியான்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!