2.6 பில்லியன் மக்களுக்கு ஸிக்கா தொற்றும் ஆபத்து

ஆசியா, ஆப்பிரிக்கா பகுதிகளில் வசிக்கும் சுமார் 2.6 பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் ஸிக்கா ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் என்று 'த லான்செட்' தொற்று நோய் சஞ்சிகை தெரிவித்துள்ளது. இந்தியா, இந்தோனீசியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் ஸிக்கா கிருமி பரவும் ஆபத்து அதிகம் என்றும் அது குறிப் பிட்டது. நாடு விட்டு நாடு செல்லும் பயணிகளின் விவரங்களை அடிப்படையாக வைத்து ஸிக் காவின் ஆபத்து குறித்து சஞ்சி கையில் அறிவியல் அறிஞர்கள் எழுதியுள்ளனர். இருப்பினும் சில பகுதிகளில் நோய் எதிர்ப்பு ஆற்றல் நிலவு வதால் அது ஸிக்கா கிருமியின் ஆபத்தை மட்டுப்படுத்தும் என் பதை ஆய்வாளர்கள் ஒப்புக் கொண்டனர். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகம், டொரோண்டோ பல் கலைக் கழகம், லண்டன் சுகா தார, மருத்துவப் பள்ளி ஆகிய வற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள், ஸிக்கா கிருமியைத் தடுக்க முடியாத, கண்டுபிடிக்க முடியாத, ஈடுகொடுக்க முடியாத பகுதி களிலேயே பெரும்பாலான மக்கள் வசிக்கின்றனர்," என்றனர்.

தென் அமெரிக்காவிலிருந்து ஆப்பிரிக்கா, ஆசியா வரை ஸிக்கா கிருமியால் பாதிக்கப்பட்ட இடங்களில் பயணிகளின் எண் ணிக்கை உள்ளிட்ட விவரங்களை அவர்கள் ஆராய்ந்தனர். அதன் மூலம் ஸிக்காவால் பாதிக்கப்படும் மக்கள் தொகையை அவர்கள் மதிப் பிட்டுள்ளனர். பிலிப்பீன்ஸ், வியட்னாம், பாகிஸ்தான், பங்ளாதேஷ் போன்ற நாடுகளில் சுகாதார வசதிகள் ஒரு வரம்புக்கு உட்பட்டு இருப் பதால் ஸிக்கா தொற்றும் ஆபத்து அதிகம் என்றும் அவர்கள் தெரி வித்தனர். டொரோண்டோவில் உள்ள செயின்ட் மைக்கல்ஸ் மருத்துவ மனையைச்சேர்ந்த ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியரான டாக்டர் கம்ரான் கான், "ஸிக்கா கிருமியை அடையாளம் கண்டு பிடித்து உடனடியாக பதில் நட வடிக்கை எடுக்கும் நாடுகளின் ஆற்றலைப் பொறுத்தே ஸிக்கா பாதிப்புகள் இருக்கும்," என்றார். தற்போது 65 நாடுகள், வட்டாரங்களுக்கு மேல் ஸிக்கா கிருமி தொடர்ந்து பரவி வரு கிறது. கொசுக்கடியால் பரவும் இந்தத் தொற்று நோய் அண்மையில் ஆப்பிரிக்கா நாட்டையும் தொட்டு உள்ளது.

இந்தோனீசியாவின் ஜோக்ஜகார்த்தா விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகளின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் கர்ப்பிணிப் பெண்கள், இங்கு பணியாற்றும் வெளிநாட்டவர் உட்பட ஏறக்குறைய 189 பேர் ஸிக்கா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!