தாராளமயத்திற்கு பிரதமர் லீ வலியுறுத்து

வர்த்­த­கத்­திற்­குத் தொடர்ந்து துணை புரிந்து, தாரா­ள­ம­ய­மாக்­கு­மாறு உல­கத் தலை­வர்­களி­டம் பிர­த­மர் லீ சியன் லூங் வலி­யு­றுத்­தி­யுள்­ளார். ஜி-20 அமைப்­பின் தலை­வர்­களுக்­கான உச்­ச­நிலை மாநாட்­டின் ஓர் அங்கத்­தில் பேசிய திரு லீ, உலக வர்த்­தக நிறு­வ­னத்­தின் வர்த்­த­கத் துணை­யா­த­ரவு ஒப்­பந்தத்­திற்கு ஆத­ர­வ­ளிக்­கு­மாறு உறுப்பு நாடு­களைக் கேட்­டுக்கொண்டார். செல­வு­களைக் குறைத்து, சரக்கு விநி­யோ­கத்தைத் துரி­தப்­படுத்தி வர்த்­த­கத்­திற்­குத் துணை புரி­வது ஒப்­பந்தத்­தின் நோக்கம்.

"வர்த்­த­கத்­திற்­குத் தொடர்ந்து துணைபுரிந்து, தாரா­ள­ம­ய­மாக்­கும் முயற்­சியைக் கட்­டிக்­காக்க அனைத்­து­லக அடிப்­படை­யில் நாம் செயல்­ப­ட­வேண்­டும்," என்றார் திரு லீ. இந்த அங்கத்­தின்­போது, அதி­க­ரித்­து­வ­ரும் வர்த்­தக எதிர்ப்­பு­கள், மெது­வடைந்­து­வ­ரும் உல­க­ளா­வி­ய பொரு­ளி­யல் ஆகி­ய­வற்­றுக்கு மத்­தி­யில் வர்த்­த­கத்தை­யும் முத­லீ­டு­களை­யும் ஊக்கப்படுத்துவதன் முக்­கி­யத்­து­வத்தைப் பற்றி உல­கத் தலை­வர்­கள் கலந்து பேசினார்­கள்.

தன்னைப்­பேணி நட­வ­டிக்கை­கள் 2008 முதல் அதி­க­ரித்து வரு­வ­தாக உலக வர்த்­தக நிறு­வ­னத்­தின் ஜூன் மாதப் புள்­ளி­வி­வ­ரங்கள் காட்­டு­கின்றன. இதனால், வர்த்­த­கத்தைச் சார்ந்­தி­ருக்­கும் சிங்கப்­பூர் போன்ற சிறிய நாடு­கள் பாதிப்­புக்கு உள்­ளா­கக்­கூடும். பெரிய சந்தை­களுக்­குக் கூடு­த­லாக இரண்டு நட­வ­டிக்கை­களை­யும் திரு லீ பரிந்­துரைத்­தார்: உலக வர்த்­தக நிறு­வ­னத்­தின் சுற்­றுப்­பு­ற­வி­யல் பொருட்­கள் ஒப்­பந்தம் குறித்த பேச்சுவார்த்தை இவ்­வாண்டு இறு­திக்­குள் நிறை­வடை­ய­வேண்­டும் என்­பது முதல் பரிந்­துரை. காற்­றுச் சுழல்­பொறி, தண்­ணீர் சுத்­தி­க­ரிப்பு வடி­கட்­டி­கள் போன்ற "பசுமை" பொருட்­களின் தீர்வையைக் குறைப்­பது ஒப்­பந்தத்­தின் நோக்கம்.

வளர்ச்­சியைப் பெருக்க தொலைத்­தொ­டர்பு, சுற்­றுப்­பு­ற­வி­யல் சேவை­களை உல­கத் தலை­வர்­கள் தாரா­ள­ம­யப்­படுத்­த­வேண்­டும் என்­பது இரண்டா­வது பரிந்­துரை. வர்த்­த­கம் பற்­றிய பொது கண்­ணோட்­ட­மும் மாறி­யி­ருப்­ப­தா­கத் திரு லீ குறிப்­பிட்­டார். வர்த்­த­கத்­தால் தாங்கள் பய­னடை­ய­வில்லை என்று கரு­திய தொழி­லா­ளர்­கள் இப்­போது கலக்­க­மடைந்து வரு­வ­தாக அவர் கூறினார்.

சீனாவின் ஹாங்ஸே„வ் நகரில் நடைபெற்றுவரும் உச்ச நிலை மாநாட்டில் கலந்துகொண்ட ஜி-20 நாடுகளின் தலைவர்களுடன் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் (இடமிருந்து நான்காவது), இடக்கோடியில் திருமதி லீ, நடுவில் அதிபர் ஒபாமா. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!