‘சமூக வெற்றியாளர்’ கேசவபாணி

முஹம்மது ஃபைரோஸ்

இவ்வாண்டிற்கான தப்லா! வார இதழின் சமூக வெற்றியாளர் விருதைத் திரு கே.கேசவபாணி வென்றுள்ளார். முன்னாள் தூதரும் சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் தலைவரு மான 79 வயது திரு கேசவபாணி இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய இன்றியமையாத பங்க ளிப்பிற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

2011ஆம் ஆண்டில் தொடங்கப் பட்ட இந்த சமூக வெற்றியாளர் விருது ஆறாவது முறையாக இவ்வாண்டு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர் துறை மற்றும் வர்த்தக, தொழில் அமைச்சுகளின் மூத்த துணை அமைச்சர் சிம் ஆன், திரு கேசவபாணிக்கு விருது வழங்கிச் சிறப்பித்தார். தமிழ் முரசின் துணை இதழான தப்லா! வழங்கும் இந்தச் சமூக வெற்றியாளர் விருதுக்கு ஆதரவு அளித்து வரும் பாரத ஸ்டேட் வங்கி, திரு கேசவபாணி யிடம் $10,000க்கான காசோ லையை வழங்கியது. அந்நிதி, சிங்கப்பூர் இந்தியர் சங்க நல்வாழ்வு நிதிக்கும் சிங்கப் பூர் கற்றல் குறைபாடு சங்கத்திற் கும் நன்கொடையாகச் செல்லும். “மறைந்த முன்னாள் அதிபர் திரு எஸ் ஆர் நாதனும் சிங்கப்பூர் கற்றல் குறைபாடு சங்கத்தைத் தோற்றுவித்த மறைந்த டாக்டர் ஜிம்மி டாருவாலாவும் சமூக சேவைத் துறையில் எனக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தனர்,” என்று பெருமிதத்துடன் கூறினார் திரு கேசவபாணி.

‘சமூக வெற்றியாளர்’ விருது வென்ற முன்னாள் தூதரும் சிங்கப்பூர் இந்தியர் சங்கத் தலைவருமான திரு கேசவபாணிக்கு (வலமிருந்து 2வது) $10,000க்கான காசோலையை வழங்கும் வர்த்தக, தொழில் மற்றும் கலாசார, சமூக, இளையர் துறை மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் (இடமிருந்து 2வது), தமிழ் முரசு தலைவர் எஸ்.சந்திரதாஸ் (இடது), எஸ்பிஐ வங்கியின் சிங்கப்பூர் தலைமை நிர்வாகி சோம சங்கர பிரசாத். ‘சிங்கப்பூர் அனைத்துலக இந்தியக் கண்காட்சி’ தொடக்க விழாவில் குத்து விளக்கேற்றும் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ ஆசிரியரும் எஸ்பிஎச் ஆங்கில, மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் முதன்மை ஆசிரியருமான வாரன் ஃபெர்னாண்டஸ் (வலது படம்). படங்கள்: திமத்தி டேவிட்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூரில் உள்ள அனைத்து  குடிநுழைவு சோதனைச்சாவடிகளிலும் 2025ஆம் ஆண்டுக்குள் கைரேகை, முக அடையாளம், கண் ஆகியவற்றை 'ஸ்கேன்' செய்து தானியக்க குடிநுழைவு சோதனை முறை கடைப்பிடிக்கப்படும். கோப்புப்படம்

13 Nov 2019

அனைத்து குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் 2025க்குள் தானியக்க குடிநுழைவுச் சோதனை

போலிஸ் அலுவலக வளாகத்துக்குள் காலை 8.40 மணியளவில் நடந்து சென்ற ஓர் ஆடவர், அலுவலகம் ஒன்றின் முன்பாக வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகக் கூறப்பட்டது. படம்: இபிஏ

13 Nov 2019

போலிஸ் தலைமையகத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்; ஒருவர் பலி, அறுவர் காயம்

பிடோக் வட்டாரத்தில் இன்று மதியவாக்கில் புகைமூட்ட நிலவரம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Nov 2019

சுகாதாரமற்ற நிலையை எட்டியது காற்றின் தரம்