தமிழ் மொழி நிலைக்கும்

பெரிதான சிங்கப்பூர் கலாசாரத்தில் பங்களிக்கும் நமது தமிழ் கலாசாரம் குறித்து பெருமிதம்கொள்வதுடன் சமூகப் பிணைப்பை தொடர்ந்து வலுப்படுத்தவேண்டும் என்றார் துணைப் பிரதமர் தர்மன் சண்முக ரத்னம். “மாறிவரும் சிங்கப்பூர் கலாசாரத்தில் தமிழ் கலாசாரமும் முக்கியப் பங்காற்றுகிறது. “சிறுபான்மையினராக இருந்தா லும் நான்கு அதிகாரத்துவ மொழி களில் தமிழும் ஒன்று என்பது பெருமைக்குரியது,” என்றார் துணைப் பிரதமர் தர்மன். சிங்கப்பூரில் இறுதிவரை தமிழ் மொழி அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாக நீடிக்கும் என்றும் அவர் உறுதி கூறினார்.

முத்தமிழ் விழா, கம்பன் விழா, கண்ணதாசன் விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் உள்ளூர் எழுத்தாளர்களை உரு வாக்க முற்படும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் தனது 40ஆம் ஆண்டு நிறைவை நேற்று விமரி சையாகக் கொண்டாடியது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய திரு தர்மன், தமிழ் மொழியும் தமிழ் கலாசாரமும் தனித்துவமான சிங்கப்பூரின் தேசிய வளர்ச்சியில் பெருமைகொள்ளக்கூடிய அம்சங் கள் எனத் தெரிவித்தார். மாறிவரும் சிங்கப்பூரில் தமிழ் கலாசாரம் பங்காற்றுவதற்கு எழுத் தாளர்கள், ஆசிரியர்கள், ஊடகங் கள் ஆகியவை, காரணங்களாக அமைவதுடன் சிறுபான்மையின ரின் கலாசாரத்தை உயிருள்ளதாக நிலைத்திருக்க அவை முக்கிய மாகத் திகழ்கின்றன என்று மேலும் சொன்னார் திரு தர்மன்.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு நா ஆண்டியப்பன், துணைப் பிரதமர் தர்மன், திரு நாகை தங்கராஜ், கழகத்தின் செயலாளர் திரு சுப அருணாசலம். படம்: நாதன் ஸ்டுடியோஸ் கிஷோர்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர உழைக்கும் தீயணைப்பு வீரர்கள் (படங்கள்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ ஃபேஸ்புக்)

18 Nov 2019

தை செங் எம்ஆர்டி நிலையம் அருகே தீ
Gotabaya Rajapaksa has won the Sri Lankan presidency after a closely fought election

இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே

17 Nov 2019

தேர்தலில் வெற்றி; இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே