செம்பவாங்கில் கதவை உடைத்து போலிஸ் நுழைந்தது; சிறுவன் மீட்பு

செம்பவாங்கில் ஆடவரிடம் சிக்கிக் கொண்ட இரண்டு வயதுச் சிறுவன் 17 மணி நேர போலிஸ் முற்றுகைக்குப் பின்னர் மீட்கப் பட்டான். சம்பவத்தில் தொடர்புடைய 39 வயது ஆடவர் கைது செய்யப் பட்டார். செம்பவாங் டிரைவ் புளோக் 462ன் ஐந்தாவது தளத்தில் உள்ள வீட்டில் அந்த சந்தேக நபர் சிறுவனுடன் கதவைத் தாழிட்டுக்கொண்டதாக நேற்று முன்தினம் மாலை 6.40 மணி யளவில் போலிசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு போலிஸ் விரைந்தது.

இரவு 8 மணியளவில் அந்த வீட்டுக்குள் இருந்து குழந்தை அழும் சத்தம் பலமாகக் கேட்ட தாக அந்த புளோக்கில் குடியிருக் கும் ஆடம் பாய், 33, என்பவர் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தா ளிடம் தெரிவித்தார். புளோக்கின் கீழ்த்தளத்தில் காற்றடைக்கப்பட்ட உயிர்காப்புச் சாதனத்தை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அமைத்தது. இது தவிர நான்கு தீயணைப்பு வாகனங்கள், ஓர் ஆம்புலன்ஸ், மூன்று ஆதரவு வாகனங்களையும் குடிமைத் தற்காப்புப் படை அந்தப் புளோக்கின் அருகில் நிறுத்தி இருந்தது.

பேரிடர் உதவி மீட்புக் குழுவும் தயார்நிலையில் வைக்கப்பட்டது. கதவைத் திறக்க அந்த ஆடவர் மறுத்ததாக போலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பிரச்சினை தொடங்குவதற்குச் சற்று முன்னர் சிறுவனின் தாயா ருக்கும் அந்த ஆடவருக்கும் இடையில் சச்சரவு மூண்டதாகக் கூறப்பட்டது. நேற்று பிற்பகல் 12.03 மணிக்கு சிறப்பு அதிரடி போலிசார் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றதாக போலிஸ் படை தனது ஃபேஸ்புக்கில் தெரி வித்தது. சட்டவிரோதமாகச் சிறைவைத் தல், போதை தொடர்பான குற் றங்கள் ஆகியவற்றுக்காக ஆட வர் கைது செய்யப்பட்டார். சிறு வனின் தாயாரும் போதை தொடர் பான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டார்.

தயார்நிலையில் ஆம்புலன்ஸ், போலிஸ் வாகனங்கள்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களைப்போல, மல்கர்-பிரியங்கா தம்பதி நம்பத்தகுந்த சாட்சியங்களாக இல்லை என்று நேற்றுத் தீர்ப்பு வாசித்தபோது மாவட்ட நீதிபதி சைஃபுதீன் சருவான் கூறினார். கோப்புப்படம்

15 Nov 2019

வெளிநாட்டு ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டிய இந்தியத் தம்பதி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்

கடந்த ஏப்ரல் மாதத்தில் செயல்படத் தொடங்கிய ஜுவல் வளாகத்தை 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். படம்: சாவ் பாவ்

15 Nov 2019

அனைத்துலக அளவில் சிறப்பு விருது பெற்று மேலும் மிளிர்கிறது ‘ஜுவல்’

இஸ் ஃபயாஸ் ஸயானி அகமது எனும் அந்த 9 மாதக் குழந்தை இம்மாதம் 8ஆம் தேதி இறந்துபோனதையடுத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு புதைக்கப்பட்டதாக அவனது குடும்பத்தாரின் ஃபேஸ்புக் பதிவுகள் குறிப்பிட்டன. படம்: ஃபேஸ்புக்

15 Nov 2019

குழந்தையின் தலையை காரில் மோதிய ஆடவர்மீது இப்போது கொலைக் குற்றச்சாட்டு