நம்பிக்கை தரும் இந்திய வர்த்தகச் சூழல்

புது­­­டெல்­­­லி­­­யி­­­லி­­­ருந்து தமி­­­ழ­­­வேல், துணை செய்தி ஆசி­­­ரி­­­யர்

இந்­­­தி­­­யா­­­வில் வர்த்­­­தகம் புரிய இது சிறந்த தருணம் என்றும் தற்போது இங்­­­குள்ள வர்த்­­­தகச் சூழல் மிகவும் நம்­­­பிக்கை அளிக்­­­கிறது என்றும் கூறு­­­கிறார் சிங்கப்­­­பூர் இந்திய வர்த்­­­தக தொழில் சபையின் தலைவர் டாக்டர் ஆர் தேவேந்­­­தி­­­ரன். ஆறு ஆண்­­­டு­­­களுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது இந்­­­தி­­­யா­­­வில் வர்த்­­­த­­­கம் புரிய உகந்த சூழல் நில­­­வு­­­கிறது என்பது அவரது கணிப்பு. இந்­­­தி­­­யா­­­வுக்கு ஐந்து நாள் பயணம் மேற்­­­கொண்­­­டி­­­ருக்­­­கும் பிர­­­த­­­மர் லீ சியன் லூங்குடன் சென்றி ருக்கும் வர்த்தகக் குழுவில் இடம்பெற்றுள்ள டாக்டர் தேவேந்திரன், புது­­­டெல்­­­லி­­­யில் நேற்று முன்தினம் நடந்த சிங்கப்­­­பூர் வர்த்­­­த­­கர்களுக்­­­கான கூட்­­­டத் ­­­தில் பங்கேற்றபின் தமிழ் முரசிடம் பேசினார். இக்கூட்டத்திற்கு பிரதமர் லீ சியன் லூங்கும் சிறப்பு வருகை அளித்­­­தார். "இந்திய அரசு அதி­­­கா­­­ரி­­­கள் வழி­­­காட்­­­டி­­­க­­­ளாக இருக்­­­கிறார்­­­கள். சொல்­­­வதைச் செய்­­­கிறார்­­கள். அதை விரை­­­ந்தும் செய்து முடிக்­­­கிறார்­­­கள். இந்­­­தி­­­யப் பிர­­­த­­­மர் நரேந்­­­திர மோடியின் தலைமை­­­யில் பல கத­­­வு­­­கள் திறந்துள்ளன. கூடிய விரைவில் இந்தியா பெரும் வளர்ச்சி அடையும் என்பது திண்ணம்," என்றார் டாக்டர் தேவேந்­­­தி­­­ரன்.

அண்மைய ஆண்­­­டு­­­களில் சிங்கப்­­­பூர்=இந்திய உறவு மிகவும் அணுக்கமடைந்துள்ளது என்றும் இந்­­­தி­­­யா­­­வின் வளர்ச்­­­சியில் சிங்கப்­­­பூ­­­ரும் அதிக பயன் அடை யும் என்றும் அவர் நம்­­­பு­­­கிறார். சிங்கப்­­­பூ­­­ரின் முன்னாள் பிர­­­த­­­மர் கோ சோக் டோங் தொடங்கி வைத்த பணியை திரு லீ சியன் லூங் மேலும் சிறப்பாகத் தொடர் கிறார் என்றும் திரு தேவேந்திரன் குறிப்­­­பிட்­­­டார். திரு கோ சோக் டோங் 1990களில் இந்­­­தி­­­யா­­­வில் வாய்ப்­­­பு­­­கள் அதிகம் உள்ளன என்­­­பதைச் சுட்டி, சிங்கப்­­­பூர் முத­­­லீட்­­­டா­­­ளர் களை இந்தியாவில் கால்பதிக்க ஊக்­­­கு­­­வித்து இரு நாட்­­­டுக்­­­கும் இடையே வர்த்­­­த­­­கப் பாலத்தை உரு­­­வாக்குவதில் முக்­­­கி­­­ய பங்களித்­­­தார். "திரு லீ இரு நாடு­­­களை­­­யும் வர்த்­­­தக, பொரு­­­ளி­­­யல் ரீதியாக இணைக்க பெரும் முயற்சி எடுத்து வரு­­­கிறார். அதனால் இரு நாட்டு மக்­­­களிடை­­­யே­­­யும் உறவு மேம்பட்­­­டுள்­­­ளது," என்று டாக்டர் தேவேந்­­­தி­­­ரன் சொன்னார். சிங்கப்­­­பூர் இந்தியர் வர்த்­­­தக தொழில் சபையைப் பொறுத்­­­த­­­மட்­­­டில் தற்போது இந்­­­தி­­­யா­­­வில் இருக்­­­கும் வாய்ப்­­­பு­­­கள் குறித்­­­து தாம் மிகவும் திருப்­­­தி­­­யாக இருப்­­­ப­­தாக­­­வும் இந்­­­தி­­­யா­­­வில் வர்த்­­­த­­­கம் அல்லது முதலீடு செய்ய விரும்­­­பு­­­வோ­­­ருக்­­­கான ஒரு தகவல் மையத்தை சபை ஏற்படுத்தி உள்­­­ளதை­­­யும் அவர் சுட்­­­டினார்.

மேலும் பல சிங்கப்­­­பூர் நிறு­­­வ­­­னங்களும் வர்த்­­­த­­­கங்களும் இந்­­­தி­­­யா­­­வில் முதலீடு செய்­­­வதை சபை ஊக்­­­கு­­­விக்­­­கும் என்றும் அவர் கூறினார். சிங்கப்­­­பூர் இந்தியர் வர்த்­­­தக தொழில் சபை உறுப்­­­பி­­­னர்­­­கள் 12 பேர் உட்பட சிங்கப்­­­பூ­­­ரி­­­லி­­­ருந்து கிட்­­­டத்­­­தட்ட 50 வர்த்­­­த­­­கர்­­­கள் புது ­­­டெல்­­­லிக்கு வந்­­­துள்ள­­­னர். புது டெல்­­­லியைத் தொடர்ந்து அவர்­­­கள் மும்பையில் நடைபெறும் வர்த்­­­தகர்கள் சந்­­­திப்­­­பிலும் பங்கேற்பார்கள். பிர­­­த­­­மர் திரு லீ சியன் லூங் கும் திரு மோடியும் நேற்று முன் தினம் புது டெல்­­­லி­­­யில் சந்­­­தித்­­­த­­­னர். சிங்கப்­­­பூர்=இந்தியா வர்த்­­­த­­­க கூட்­­­டு­­­றவை மேலும் மேம்படுத்­­­தும் வண்ணம் மூன்று புரிந்­­­து­­­ணர்வு ஒப்­­­பந்தங்கள் அவர்­­­கள் முன்னி லையில் கையெழுத்தாயின.

பிரதமர் லீ சியன் லூங்கும் திருமதி லீயும் இந்தியாவில் வசிக்கும் சிங்கப்பூரர்களை செவ்வாய் இரவு புதுடெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் சந்தித்து உரையாடினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!