எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இளம் தலைமுறை - பிரதமர் லீ சியன் லூங்

அடுத்த முப்பது ஆண்டுகளில் சிங்கப்பூரின் எதிர்காலம் எப்படி இருக்கும், சிங்கப்பூரில் எத்தகைய சமூகம் இருக்கும் என்பது அடுத்த தலைமுறை சிங்கப்பூரர் களைப் பொறுத்தது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரி வித்துள்ளார். தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை இளம் தலைமுறை யினர் எவ்வாறு பயன்படுத்திக் கொள்வர், நிச்சயமற்ற சூழ்நிலை களையும் மாற்றங்களையும் எதிர் கொள்ளும்போது அவர்கள் எவ் வாறு மீண்டெழுகின்றனர், முந் தைய தலைமுறையினரைப் போல ஒற்றுமையுடன் ஒரே மக்களாக இணைந்து செயல்படுகின்றனரா போன்ற காரணிகள் சிங்கப்பூரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்றும் பிரதமர் லீ குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் நேற்று நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது திரு லீ இவ்வாறு பேசினார். தற்போது சிக்கலான பொரு ளியல் சூழ்நிலைகளைச் சந்தித்து வந்தாலும் சிங்கப்பூர் சரியான பாதையில் சென்று வருவதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார். “மறுசீரமைப்பின் தாக்கத்தை நாம் உணர்கிறோம். அதே நேரத் தில் நமது கடின உழைப்பின் பலன்களை இன்னும் நாம் காண வில்லை. சரியான கொள்கை களை நாம் கையாண்டு வரு கிறோம். உரிய காலத்தில் இந்தக் கொள்கைகள் நமக்கு நல்ல பலன்களைத் தரும் என்று நம்பு கிறேன்,” என்றார் அவர்.

இளம் சிங்கப்பூரர்கள் மீட்சித் திறன் மிக்கவர்களாகத் திகழ்ந்து, நாட்டின் எதிர்காலத்தை வடிவ மைக்கும் பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத் தினார். “உங்களது பெற்றோர்களின் தலைமுறையுடன் நீங்கள் ஒப்பு நோக்குங்கள். முப்பது ஆண்டு கால கடின உழைப்பின் பலனை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்கு நல்ல, உயர்வான அடித்தளம் கிடைத்திருக்கிறது. அதைப் பயன்படுத்தி சிங்கப்பூரை இன்னும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்,” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அசைவின்றி இருந்த ஹிருத்திக்கின் உடல் நீலம்பூத்திருந்ததைப் பார்த்து உடனடியாக விமான நிலையத்தில் உள்ள மருத்துவ சேவை மையத்தின் உதவியை நாடினர் சக்தி முருகன் தம்பதி. படம்: ஊடகம்

22 Nov 2019

மலேசியா - சென்னை விமானத்தில் 6 மாத குழந்தை உயிரிழப்பு

காரின் முன்புற வலது சக்கரத்திலும் அதற்கு அருகிலும் ரத்தம் காணப்பட்டது. படம்: ஷின் மின் நாளிதழ்

21 Nov 2019

பென்ஸ் காருடன் மோதிய விபத்தில் 64 வயது சைக்கிளோட்டி உயிரிழந்தார்

இவ்வாண்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. டெங்கியால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Nov 2019

அதிகரிக்கும் டெங்கி தொற்று; இந்த மாதமும் இருவர் உயிரிழப்பு