சிங்கப்பூர்- மியன்மார் முதலீடு உடன்பாடு பேச்சு தொடக்கம்

சிங்கப்பூரும் மியன்மாரும் இரு தரப்பு முதலீட்டு உடன்பாடு பற்றிய பேச்சுவார்த்தைகளை தொடங்க விருக்கின்றன. இரட்டை வரி விதிப்பைத் தவிர்த்துகொள்வது தொடர்பிலான இணக்கத்தை மேம்படுத்த இரு நாடுகளும் நட வடிக்கைகள் எடுக்கின்றன. இவை சிங்கப்பூருக்கும் மியன் மாருக்கும் இடையில் பொருளியல் உறவுகள் வளர்ந்து வருவதைப் புலப்படுத்தும் அறிகுறியாக இருக் கின்றன என்று தெரிவிக்கப்பட்டது.

இரு நாடுகளும் எடுக்கும் இந்த முயற்சிகள் முதலீட்டாளர் களுக்கு ஆக்ககரமான அறிகுறி யாக இருக்கும் என்றும் பொருளி யல் வளர்ச்சிக்கு இவை ஊக்க மூட்டும் என்றும் பிரதமர் லீ சியன் லூங் நேற்று தெரிவித்தார். மியன்மார் நாட்டின் அரசாங்க ஆலோசகர் திருவாட்டி ஆங் சான் சூச்சிக்கு அளித்த விருந்தில் திரு லீ இந்த அறிவிப்புகளை விடுத்தார். இரு தலைவர்களும் இஸ்தானாவில் நடந்த அந்த விருந்தின்போது இருதரப்பு உறவு கள் பற்றிப் பேசினார்கள்.

நவீன சிங்கப்பூரின் தந்தையான திரு லீ குவான் இயூ, 1965ல் திருவாட்டி சூச்சியின் தாயாரான டாவ் கின் இயைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பைக் காட்டும் புகைப்படத்தை நேற்று திருவாட்டி சூச்சிக்குப் பிரதமர் லீ சியன் லூங் வழங்கினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!