திருச்சி ஆலையில் வெடிவிபத்து; 16 பேர் பலி

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே முருங்கப்பட்டியில் தனி யார் வெடிமருந்துத் தொழிற் சாலையில் நேற்றுக் காலை திடீரென நிகழ்ந்த வெடிவிபத்தில் குறைந்தது 16 தொழிலாளர்கள் பலியாகினர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்த 'வெற்றிவேல் எக்ஸ்ப்ளோசிவ்ஸ்' எனும் அந்த ஆலை பாறைகளைத் தகர்க்கும் வெடிமருந்துகளைத் தயாரித்து வந்தது. மொத்தம் ஏழு பிரிவுகள் அங்கு இருந்ததா கவும் அதில் நான்காவது பிரிவில் விபத்து நிகழ்ந்ததாகவும் தெரி விக்கப்பட்டது. வெடிவிபத்து நிகழ்ந்தபோது அப்பிரிவில் 20 பேர் வரை இருந்ததாகவும் அவர்களில் 16 பேர் மாண்டுவிட்டதாகவும் தெரி விக்கப்பட்டது. மேலும் மூவர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதர பிரிவுகளில் பணியாற்றிய தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேறினர்.

விபத்து நிகழ்ந்த நான்காம் பிரிவுக் கட்டடத்தின் இரு தளங்களும் தரைமட்டமாகின. வெடிச் சத்தமும் அதனால் ஏற்பட்ட அதிர்வுகளும் பல கிலோமீட்டர் தொலைவுக்கு உணரப்பட்டன. படம்: சதீஷ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!