பாரந்தூக்கி சாய்ந்து இரு வீடுகள் சேதம்

பாரந்தூக்கி சாய்ந்ததில் சிக்லாப் பகுதியில் இரு வீடுகள் சேத மடைந்தன. அப்பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில், நேற்றுக் காலை பெரிய பாரந்தூக்கி ஒன்று அருகில் இருந்த வீட்டின் மேற்கூரையையும் மற்றொரு வீட்டின் சுவரையும் இடித்துக்கொண்டு ஒருபக்கமாக சாய்ந்ததில் ஏற்பட்ட பெரும் மோதல் சத்தம் குடியிருப்பாளர் களைத் திடுக்கிட வைத்தது.

"சில கணங்களில் நடந்து விட்டது," என்றார் சம்பவத்தை நேரில் பார்த்த 38 வயது கட்டு மானப் பணியாளர் திரு கருப்பன். சாங்கி ரோட்டை ஒட்டியிருக்கும் சிக்லாப் பிளெய்னில் நேற்றுக் காலை 10.40 மணிக்கு அந்தச் சம்பவம் நடந்தபோது அருகில் இருந்த கட்டுமானத் தளத்தில் அவர் பணிபுரிந்துகொண்டிருந்தார். பாரந்தூக்கி "பாரம்தாங்காமல் சாய்ந்த"போது ஊழியர்கள் கான் கிரீட்டை மேலே தூக்க முயற்சி செய்துகொண்டிருக்க வேண்டும் என்று அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.

சிக்லாப் பிளெய்னில் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும் இடத்தில் நேற்றுக் காலையில் பாரந்தூக்கி ஒன்று பக்கவாட்டில் சாய்ந்தது. சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அறியப் படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!