இலங்கையில் வன்முறை; போலிஸ் மீது தாக்குதல்

இலங்கையின் தென்பகுதித் துறை முகத்தை சீனாவுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதை எதிர்த்து அங்கு பெரிய அளவிலான வன் முறை மூண்டது. எதிர்ப்புப் போராட்டம் நடத் தக்கூடாது என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி ஏராள மான கிராம மக்களும் பௌத்த பிக்குகளும் களத்தில் இறங்கி ஒரு கை பார்த்தனர். தலைநகர் கொழும்புக்கு தென் கிழக்கே 240 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹம்பாந் தோட்டை ஆழ்கடல் துறை முகத்தைத் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விட இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அந்த தனியார் நிறுவனத்தின் 80 விழுக்காட்டு உரிமை சீனா விடம் உள்ளது. மேலும், துறை முகத்தின் அருகில் தொழில்துறை மண்டலம் அமைக்கவும் அந்த மண்டலத்தில் தொழிற்சாலைகளை ஏற்படுத்த சீனாவுக்கு அழைப்பு விடுக்கவும் இலங்கை முடிவு செய்துள்ளது. அதிபர் சிறிசேன அரசாங்கம் பதவி ஏற்ற இரண்டாம் ஆண்டு நிறைவு நாளான நேற்று முன்தினம் அந்த 'தென்னிலங்கை தொழில் மண்டல' தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கிராம மக்களோடு பௌத்த பிக்குகளும் போராட்டத்தில் கலந்துகொண்டு அரசாங்க எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!