ஜல்லிக்கட்டுப் போராட்டம் இளையர்கள் கைது: தமிழகத்தில் கொந்தளிப்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் விடிய விடிய போராட்டம் நடத்திய இளையர் களை போலிஸ் கைது செய்ததால் கொதிப்படைந்த பொதுமக்கள், அவர்களை விடுவிக்கும் வரை ஓயப்போவதில்லை எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையால் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழகத்தில் ஜல்லிக் கட்டு நடத்த முடியாமல் போனது. தடையை மீறி ஒரு சில இடங்களில் நடத்தப்பட்டாலும் அந்த வீர விளை யாட்டுக்குப் பெயர்போன அலங்கா நல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் அது நடை பெறாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்கக்கோரி ஆங்காங்கே போராட்டங்கள் தொடர்ந்து வந்த நிலையில் அலங்காநல்லூரில் நேற்று முன்தினம் நூறாயிரம் பேர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட தாகத் தமிழகத் தகவல்கள் கூறின. அதிலும், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அங்கு திரண்ட இளையர்கள் 240 பேர் இரவிலும் தங்களது போராட்டத் தைத் தொடர்ந்தனர். அவர்களுக்கு உணவு, நீர் கூட கொடுக்கவிடாமல் போலிசார் தடுத்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து 21 மணி நேரம் போராட்டம் நடத்திய சுமார் 240 பேரை போலிசார் விடுவிக்கவேண்டும் என்று அலங்காநல்லூர், வாடிப்பட்டி கிராம மக்கள் நேற்றுக் காலை முதல் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையிலும் மாணவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் டி.ராஜேந்தர் போன்றோர் நேரில் சென்று இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். படம்: சதீஷ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!