தடுப்புச் சுவரில் ஏறி நின்ற டாக்சி

கார் நிறுத்துமிடத்தில் டாக்சியை நிறுத்த முற்பட்டபோது ஓட்டுநர் தவறுதலாக வேகமுடுக்கியை (ஆக்சலரேட்டர்) மிதித்ததால் அது தடுப்புச் சுவரின் மீதேறி இரு குடியிருப்புகளுக்கு இடையி லுள்ள நடைபாதையில் நின்றது. ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 81, 816-817 புளோக்குகளில் நேற்றுக் காலை இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பெரும் சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம்பக்க குடியிருப்பா ளர்கள், நடைபாதை தடுப்புச் சுவரின் மீதேறி ஒரு டாக்சி நிற் பதைக் கண்டனர்.

அருகிலுள்ள காப்பிக்கடையில் இருந்த 56 வயதான திரு டியோ செங் சுவீக்கும் இந்தச் சத்தம் கேட்டது. டாக்சி ஓட்டுநர் தவறு தலாக வேகமுடுக்கியின்மீது கால் வைத்ததுதான் இதற்குக் காரணம் என்றார் திரு டியோ. காலை 8.10 மணிக்கு இந்தச் சம்பவம் பற்றி தகவல் கிடைத் ததை அடுத்து, அங்கு அவசர மருத்துவ வாகனம் ஒன்றை அனுப்பி வைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறி யது. சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை என்றும் அது தெரிவித்தது. வார இறுதிகளில் அந்த நடைபாதையில் பறவைப் பிரியர் கள் பலரும் கூடுவர் என்ற ஒரு குடியிருப்பாளர், நல்லவேளையாக வார நாள் என்பதால் யாரும் அங்கில்லை என்றும் சொன்னார். சம்பவம் குறித்து போலிஸ் விசாரித்து வருகிறது.

டாக்சி புகுந்த நடைபாதையில் வார இறுதி நாட்களில் பறவைப் பிரியர்கள் அதிகமானோர் திரள்வர் என்றும் நல்லவேளையாக வார நாளில் விபத்து நிகழ்ந்ததால் அங்கு யாரும் இல்லை என்றும் குடியிருப்பாளர் ஒருவர் சொன்னார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!