பிரதமர்: பொருளியல் புதுப்பிப்புத் திட்டங்கள் விரைவில் அறிவிப்பு

பொருளியலைப் புதுப்பிக்கும் திட் டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். தமது சீனப் புத்தாண்டு வாழ்த் துச் செய்தியில் பொருளியலைப் புதுப்பிப்பதன் முக்கியத்துவம் குறித்துப் பேசிய அவர், நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், அமைச்சர் ஈஸ்வரன் தலைமையி லான எதிர்கால பொருளியலுக்கான குழு விரைவில் தனது அறிக்கையை வெளியிடும் என்றார். அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கான வளர்ச்சி உத்திகளை விளக்கும் இந்த அறிக்கை, புதிய, நம்பிக்கை தரும் தொழில்களையும் தொழில் துறைகளையும் அடையாளம் காட்டும். அத்துடன் நமது பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் ஊழியரணியில் சேரும்போது அவர்கள் கூடுதலான வாய்ப்பு களைப் பெறுவதையும் இத்திட்டம் உறுதிசெய்யும் என்றார் அவர். குழு முன்னுரைக்கும் திட்டங் களைச் செயல்படுத்தும் உறுதியான செயல்திட்டங்களை வரவுசெலவுத் திட்டம் முன்னெடுக்கும். அத்துடன் நமது உடனடி பொருளியல் தேவைகளைச் சமாளிப்பதற்கான திட்டங்களை யும் வரவுசெலவுத் திட்டம் அறி விக்கும் என்றார் பிரதமர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!