கனடா துப்பாக்கிச்சூட்டில் அறுவர் மரணம்

கனடாவின் பள்ளிவாசல் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் மாண்டனர். எட்டுப் பேர் காய முற்றனர். இச்சம்பவம் தொடர் பில் இரு ஆடவர்களை போலிசார் கைது செய்துள்ளனர். இருப்பினும் கைது செய்யப் பட்டவர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. கியூபெக் நகரிலுள்ள இஸ்லா மிய கலாசார மையம் அருகே உள்ள அப்பள்ளிவாசலில் ஞாயிற்றுக் கிழமை மாலை நேரத் தொழுகைக் காக கிட்டத்தட்ட ஐம்பது பேர் குழுமி இருந்தபோது திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.

அதனைத் தொடர்ந்து துப்பாக் கிக்காரர்கள் அந்த இடத்தைச் சூழ்ந்துகொண்டு சரமாரியாகச் சுட்டனர். இச்சம்பவம் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று கனடா அதி காரிகள் தெரிவித்துள்ளனர். முஸ்லிம்களின் வழிபாட்டு மையம் மீது நடத்தப்பட்ட இந்தப் பயங்கரவாதத் தாக்குதலை கண் டிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோ தமது அறிக்கையில் தெரி வித்துள்ளார். "கனடா முஸ்லிம்கள் நமது தேசிய ஒற்றுமையின் ஒரு முக்கிய அங்கம். இதுபோன்ற முட்டாள் தனமான தாக்குதல்களுக்கு கனடா சமூகத்தில் இடமில்லை," என்று அவர் மேலும் குறிப்பிட்டு உள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட இடத்தைச் சுற்றிலும் பதற்றம் நிலவியது. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!