தேசிய சேவையாளர்களுக்கு $100 பற்றுச்சீட்டு

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தேசிய சேவை தொடங்கப்பட்ட போது இருந்ததைவிட இன்றைய தேசிய சேவையாளர்களுக்கு நாட்டைப் பாதுகாக்க அதிகம் உள்ளது என்பதே சிங்கப்பூரின் வெற்றியாகக் கருதப்படுகிறது என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் கூறியுள்ளார். தேசிய சேவையின் 50 ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதத்தில் ஆண்டு முழுவதுக்குமான நிகழ்வுகளையும் அவர் தொடங்கிவைத்தார். புலாவ் தெக்கோங்கில் 100 தேசிய சேவையாளர்கள் அடிப்படை ராணுவப் பயிற்சிக்கான உறுதி மொழியை எடுத்துக்கொள்வதற்கு முன்பாகப் பேசிய டாக்டர் இங், 50 ஆண்டு தேசிய சேவையைக் குறிப்பிடும் விதத்தில் 'NS50 நினைவுப் பொட்டலம்' ஒன்றையும் அறிவித்தார். அதன்படி, இதுவரை தேசிய சேவை புரிந்தவர்கள், தற்போது தேசிய சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள் ஆகிய அனைவருக்கும் $100 மதிப்பிலான சில்லறை விற்பனை, உணவு, குடிபானக் கடைகளுக்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.

புலாவ் தெக்கோங்கில் குழுமியிருந்த முன்னோடித் தலைமுறை தேசிய சேவையாளர்களுடன் உரையாடிய தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!