விழுந்த மரத்தை அப்புறப்படுத்திய மக்கள்

காக்கி புக்கிட் அவென்யூ 1ல் மூன்று மாடி உயரமுள்ள மரமொன்று சாலையில் விழுந்து போக்குவரத்துக்குப் பெரும் இடையூறாக இருந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள், அந்தக் காலத்துக் கம்போங் பாணியில் ஒன்று திரண்டு அந்த மரத்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்தது. மரம் விழுந்ததும் அந்தச் சாலையில் ஏராளமான வாகனங்கள் நகர முடியாமல் திணறின. செய்வதறியாது திகைத்த வாகனமோட்டிகள் இந்தப் பிரச்சினையைத் தாங்களே தீர்க்க முடிவு செய்து களத்தில் குதித்தனர். அந்தச் சம்பவத்தை வேடிக்கை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சிலரும் அவர்களுக்குக் கைகொடுக்க, 30 மீட்டர் நீளமுள்ள அந்த மரத்தை அப்புறப்படுத்த முயன்றும் அவர்களால் அகற்ற இயலவில்லை. கடைசியாக சுமார் 20 பேர் ஒன்றாகச் சேர்ந்து அந்த மரத்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி சீரான சாலைப் போக்குவரத்துக்கு உதவினர்.

காக்கி புக்கிட் அவென்யூ 1ல் சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த 30 மீட்டர் நீளமுள்ள மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள வாகனமோட்டிகளும் பாதசாரிகளும். படம்: ‌ஷின் மின்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!