பாலருக்கான தமிழ் முரசின் புதிய இதழ் ‘பாலர் முரசு’

வில்சன் சைலஸ்

பாலர் பள்ளி மாணவர்களுக்காக உள்ளூர் பொருளடக்கத்துடன் சிங்கப்பூரின் முதல் பாலர் இதழை தொடங்கியுள்ளது தமிழ் முரசு. மாதத்திற்கு இருமுறை வெளி வரும் ‘பாலர் முரசு’ என்னும் இந்தத் தனி இதழ், கல்வி அமைச்சின் இருமொழி கல்விக் கான லீ குவான் இயூ நிதியின் ஆதரவுடன் வெளிவருகிறது. செ வ் வா ய் க் கி ழ மை க ளி ல் வெளிவரவுள்ள இந்த இதழ் கால்சா பாலர் பள்ளி மாணவர் களின் படைப்புகளுடன் உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நேற்று அறிமுகமானது. தொடக்கப்பள்ளி மாணவர் களுக்காக மாணவர் முரசு, உயர்நிலை, உயர்கல்வி நிலைய மாணவர்களுக்காக இளையர் முரசு என வளரும் தலைமுறை யினருக்காக தொடர்ந்து சிறப்புப் பகுதிகளை வெளியிட்டு வரும் தமிழ் முரசு, ஏழு வயதுக்கும் குறைந்த சிறார்களுக்காக பாலர் முரசு இதழை ஆரம்பித்துள்ளது.

பாலர் முரசை வீடுகளில் பெற

சந்தாதாரராகப் பதிவு செய்துகொண்டால் பாலர் முரசு உங்கள் வீடு தேடி வரும். மேல் விவரங்களுக்கு 6319 2166 எனும் தொலைபேசி எண்ணுடன் தொடர்புகொள்ளலாம். அல்லது www.sphsubscription. com.sg என்ற இணையப் பக்கத்துக்குச் செல்லலாம்.