மின்னிலக்க பதிப்புக்கு சிறப்பு சலுகை

வில்சன் சைலஸ்

மின்னிலக்கமயமாகி உள்ள ‘தமிழ் முரசு’ நாளிதழைப் பெற அரிய வாய்ப்பு அளிக்கிறது சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெறும் அனைத்துலக இந்திய விற்பனை விழா. 6B மண்டபத்தின் D57 கூடத்தில் தமிழ் முரசு நாளிதழின் மின்னிலக்கப் பதிப்பை ஏழு நாள் வரை இலவசமாகப் பெறலாம். சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளி தழான தமிழ் முரசின் மின்னிலக்கப் பதிப்பையோ அச்சுப் பிரதியையோ அல்லது இரண்டையும் பெற புது சந்தாதாரராகும் வாடிக்கையாளர் களுக்கு $50 பெறுமானமுள்ள ஃபேர்பிரைஸ் பற்றுச்சீட்டு வழங் கப்படும்.

அச்சுப் பிரதியைப் பெற்று வரும் சந்தாதாரர்கள் மின்னிலக்கப் பதிப்பிற்கும் பதிவு செய்யும்போது $30 பெறுமானமுள்ள ஃபேர் பிரைஸ் பற்றுச்சீட்டைப் பெறுவர். இத்துடன் விற்பனை விழாவில் சந்தாவைப் புதுப்பிக்க முன்வரும் வாடிக்கை யாளர்களுக்கும் $30 பெறுமானமுள்ள ஃபேர்பிரைஸ் பற்றுச்சீட்டு கிடைக்கும். tamilmurasu.com.sg என்ற இணையப் பக்கம் மூலம் மின் னிலக்கப் பதிப்பை எவ்வாறு பயன் படுத்தலாம் என்பதைத் தமிழ் முரசு ஊழியர்களின் உதவியுடன் விற்பனை விழாவில் உள்ள கூடத்திலேயே வாடிக்கை யாளர்கள் கற்றுக்கொள்ள லாம். இத்துடன், மின்னி லக்கப் பதிப்பு குறித்து மேலும் அறிந்துகொள்ள ஏழு நாட்கள் வரை அதை இலவசமாகப் படித்துக்கொள்ளும் வாய்ப்பும் விற்பனை விழாவில் வழங்கப்படு கிறது.