குடிமைத் தற்காப்புப் படைக்குப் புதிய கலன்கள், கடற்படைத் தளங்கள்சி

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தரையிலும் தண்ணீரிலும் தன்னுடைய தீயணைப்பு ஆற்றல் களை மேம்படுத்தும் வழிகளை ஆராய்ந்து வருகிறது. அதிவேக தீயணைப்புக் கலன்கள், புதிய கடற்படைத் தளங்கள் ஆகியவை புதிய வசதிகளில் அடங்கும். இப்படையின் கடல்துறைத் தளபத்தியம் வடிவமைத்து குறிப் பிட்ட நோக்கத்திற்காக முதன் முதலாக உருவாக்கியிருக்கும் அதிவேக தீயணைப்பு உதவி கலன்கள் விரைவில் இந்தப் படையில் சேரும்.

இவை வெஸ்ட் கோஸ்ட்டிலும் பிரானி தீவிலும் உள்ள இரண்டு கடற்படைத் தீயணைப்பு நிலையங் களை மையமாகக் கொண்டு இயங்கும் என்று இந்தப் படை நேற்று நடந்த தன் பணித்திட்ட ஆய்வரங்கில் அறிவித்தது. இந்தப் புதிய கலன்கள் இந்தப் படையில் ஏற்கெனவே இருந்து வரும் கடல்துறைத் தீயணைப்பு, மீட்பு நடவடிக்கைகளுக்கு உறு துணையாக இருக்கும். ரெட் ஸ்வாட்பிஷ், புளு ஸ்வாட்பிஷ் என்று பெயரிடப்பட்ட இரண்டு கலன்களை உள்துறை அமைச்சர் கா சண்முகம் நேற்றைய நிகழ்ச்சியில் வெள்ளோட்டமிட்டார்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அதிவேக தீயணைப்புக் கலன் வெள்ளோட்ட நிகழ்ச்சியை நேற்று தொடங்கி வைத்தார் உள்துறை அமைச்சர் கா சண்முகம் (இடமிருந்து 2வது) படம்: சாவ் பாவ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!