சமயப் புரிந்துணர்வு சிங்கப்பூரின் ஒற்றுமையை வலுப்படுத்தும்

பல சமயத்தினர் ஒற்றுமையாக வாழ்வதே சிங்கப்பூரின் பலம். இது வலுவிழந்துவிடாமல் பார்த் துக்கொள்வது சிங்கப்பூரர்களின் கடமை என்று உள்துறை, சுகா தார அமைச்சுகளின் நாடாளு மன்றச் செயலாளர் அம்ரின் அமின் கூறியுள்ளார். லிட்டில் இந்தியா வட்டாரத்தி லுள்ள வழிபாட்டு இடங்களுக்கு உட்லண்ட்ஸ் இந்தியர் நற்பணிச் செயற்குழு நேற்று ஏற்பாடு செய்த மரபுடைமைச் சுற்றுலாவில் செம்ப வாங் குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினருமான திரு அம்ரின் பங்கேற்றார். "சிங்கப்பூரில் பிரிவினை செயல் களை ஒதுக்கிவிட்டு நாம் ஒற்றுமை யாக வாழ்வது மிகவும் அவசிய மானது. "ஒற்றுமையான சூழலில் மட் டுமே எல்லா சமயங்களும் செழித்து வளரும் என்பதை சிங்கப்பூரர்கள் அறிந்திருக்கவேண்டும். இதைக் கருத்தில் கொண்டுதான் இது போன்ற சுற்றுலாக்களை நடத்து கிறோம்," என்றார் அவர். சிராங்கூன் சாலையில் அமைந் திருக்கும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெரு மாள் கோயில், அங்கூலியா பள்ளி வாசல் ஆகிய இரு வழிபாட்டு இடங்கள் திரு அம்ரினுக்கும் ஏறத்தாழ 65 உட்லண்ட்ஸ் குடி யிருப்பாளர்களுக்கும் சுற்றிக்காட் டப்பட்டன.

உட்லண்ட்ஸ் இந்தியர் நற் பணிச் செயற் குழு முதல்முறை ஏற்பாடு செய்த மரபுடைமைச் சுற்றுலாவில் பல்வேறு சமயத்தினரும் பங்கேற்றனர். செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அம்ரின் அமி னும் (படிக்கட் டில் மேலிருந்து முதலாவது) குடியிருப்பாளர் களுடன் இச் சுற்றுலாவில் பங்கேற்றார். படம்: உட்லண்ட்ஸ் இந்தியர் நற்பணிச் செயற்குழு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!