கட்டுப்படியாகும் விலையில் பால் மாவு

சிங்கப்பூரில் தங்களுடைய கைக்குழந்தைகளுக்குப் பலவித பால்மாவு இருப்பதையும் அவை பெற்றோருக்குக் கிடைப்பதையும் உறுதிப்படுத்த அரசாங்கம் பல முயற்சிகளை எடுக்கும் என்று நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

கடைகளில் பலதரப்பட்ட மாவும் விற்கப்படுவதை ஏதுவாக்க இறக்குமதி நிபந்தனைகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும். மருத்துவமனைகளில் கைக்குழந்தைகளுக்குப் பல வகை சத்துணவுச் சேர்க்கைகளுடன் கூடிய அதிக வகை பால்மாவு கிடைப்பதையும் அரசாங்கம் உறுதிப்படுத்தும்.

கைக்குழந்தை பால்மாவு டப்பிகளில் ஒட்டப்படும் அல்லது அச்சிடப்படும் விவரங்கள் தொடர்பான நிபந்தனைகளை வேளாண், உணவு கால்நடை, மருத்துவ வாரியம் கடுமையாக்கும் என்று வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் மன்றத்தில் தெரிவித்தார். குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பால்மாவு தயாரிக்கும் நிறுவனங்களில் சில நிறுவனங்கள், தாங்கள் தயாரிக்கும் பால் அல்லது பால்மாவில் சத்துப் பொருட்கள் அதிகம் என்றும் அவை பிள்ளைகளுக்கு அதிக பலன்களைத் தரக் கூடியவை என்றும் எடுப்பாக விளம்பரப்படுத்துகின்றன.

ஆனால் சோதனைச்சாலையில் பரிசோதித்துப் பார்க்கையில் அத்தகைய விளம்பரங்கள் நூற்றுக்கு நூறு முற்றிலும் உண்மையானவை அல்ல என்பது தெரிய வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். சிங்கப்பூரில் விற்கப்படும் கைக்குழந்தை பால்மாவு எல்லாம், அவற்றின் விலை எப்படி இருந்தாலும், அவை சிங்கப்பூரின் சிறந்த விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு அதிக செரிமானச் சத்துடன் இருக்கின்றன. அவை பிள்ளைகள் உடல்நலனுடன் வளர உறுதுணையாக உள்ளன என்றார் டாக்டர் கோ.

ஆகையால் கைக்குழந்தை பால்மாவு தயாரிப்பு நிறுவனங்கள் செய்யும் விளம்பரங்கள் குறித்து பெற்றோர் விளிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!