வீடு புகுந்து திருட்டு; பெண் உட்பட நால்வர் கைது

சிராங்கூன், கெம்பாங்கான் வட் டாரங்களில் வீடு புகுந்து திருடி யதாகச் சந்தேகத்தின் பேரில் நால்வரை கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு போலிசார் கைது செய்தனர். அவர்களுள் ஒரு பெண்ணும் அடங்குவார். 27 முதல் 44 வயதுக்குள் நிரம்பிய அவர்கள் தெம்பனிஸ் சென்ட்ரல் பகுதியில் பிடிபட்டனர். கடந்த சனிக்கிழமை இரவு முஸ்வெல் ஹில் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் களவுபோன தாகப் புகார் அளிக்கப்பட்டது. தமது வீட்டின் முன்கதவு வலிந்து திறக்கப்பட்டு, வீடு சூறையாடப் பட்டிருப்பதை அதன் உரிமை யாளர் கண்டறிந்தார். ஆயினும், எதுவும் காணாமல் போனதாகத் தெரியவில்லை என்று போலிஸ் கூறியது. கைதான நால்வரிடம் நடத்தப் பட்ட முதற்கட்ட விசாரணையில், இதுபோன்ற வேறு சம்பவங் களிலும் அவர்களுக்குத் தொடர் பிருக்கலாம் எனத் தெரியவந்து உள்ளது. கெம்பாங்கான் குடியிருப்புப் பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற் பகலில் இது போன்றதொரு கொள்ளைச் சம்பவம் அரங்கே றியது.

திருட்டுச் செயலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர் சாலையின் குறுக்கே ஓடுவதும் போலிசார் அவரை மடக்கிப் பிடிப்பதும் கார் ஒன்றின் முன்புற கேமராவில் பதிவாகியுள்ளது. காணொளிப்படம்: ஃபேஸ்புக்/ரோட்ஸ்.எஸ்ஜி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!