சுடச் சுடச் செய்திகள்

கணினிகளை முடக்கி பணம்பெற மீண்டும் சதி

உலகளவில் பல நாடுகளிலும் கடந்த மே மாதம் கணினிகளை முடக்கி நிர்வாகத்தை நிலைகுலையவைத்த ‘வானாகிரை’ போன்ற மற்றும் ஓர் இணையத் தாக்குதல் ஆசியாவையும் எட்டிவிட்டது. ஐரோப்பாவிலிருந்து கிளம்பி அமெரிக்காவை சென்றடைந்த அந்தக் கிருமிகள், ஆசியாவிலும் நிறு வனங்களையும் துறைமுகங்களையும் அரசாங்க நிர்வாகத்தையும் ஒழுங்காகச் செயல்படவிடாமல் கெடுத்துவிட்டன. இந்தியாவின் ஆகப் பெரிய கொள் கலத் துறைமுகமாகத் திகழ்கின்ற மும்பைக்கு அருகே உள்ள ஜவகர்லால் நேரு துறைமுகத்தின் நடவடிக்கைகள் குறிப்பிடும்படியாக பாதிக்கப்பட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அந்தத் துறைமுகத்தில் உள்ள மூன்று முனையங்களில் ஒன்று நிலை குத்திப்போய்விட்டது என்றும் கணினி கள் செயல்படாமல் போனதே இதற்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது. புதிதாகக் கிளம்பி கணினிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் வைரஸ் கிருமிக்கு ‘பெட்யா’ என்று பெயர் சூட் டப்பட்டுள்ளது. முடக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கணினிக்கும் $300 கொடுத்தால் அவை பழைய நிலைக்குத் திரும்பும் என்று பணம் கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நிவியா தோல் பராமரிப்புப் பொருட்களைத் தயாரிக்கும் பியர்சர்டோர்ஃப் நிறுவனமும் ரெக்கிட் பென்கிசர் என்ற நிறுவனமும் செயல் பட முடியாமல் பாதிக்கப்பட்டுவிட்ட தாக அந்த நிறுவனங்களின் பேச்சாளர் கள் தெரிவித்தனர்.

கணினிகளில் வைரஸ் கிருமிகளைப் பரப்பிவிட்டு அவற்றைச் செயல்படாமல் முடக்கி பணம் பெற மறுபடியும் சதி இடம்பெற்றிருக்கிறது. கோப்புப்படம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon