சுடச் சுடச் செய்திகள்

கட்டுமானத் தளத்தில் ஊழியர் மரணம்

உட்லண்ஸ் வட்டாரத்தில் உள்ள 2ஏ கம்பாஸ் அவென்யூ கட்டு மானத் தளத்தில் ஊழியர் ஒருவர் உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து மாண்டார். தமிழகத்தின் பெரம்பலூரைச் சேர்ந்த 44 வயது அந்தோணிசாமி அருளானந்தம், குழாய் போன்ற துளைக்குள் விழுந்து மாண்டதாக மனிதவள அமைச்சு தெரி வித்துள்ளது. சம்பவம் கடந்த செவ்வாய்க் கிழமை காலை 9.50 மணிக்கு நடந்ததாக அமைச்சு கூறியது. 11 மீட்டர் ஆழமுள்ள அந்தக் குழாய் போன்ற துளைக்குள் திரு அருளானந்தம் விழுந்து மாண்டார். தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக திரு அருளானந் தத்தின் மரணச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டது.