சிங்கப்பூர்=மலேசியா இணக்கம்

சிங்கப்பூர், மலேசியா இடையிலான ஆகாயவெளி, கடல் எல்லை சர்ச்சைகளின் தொடர் பில் இருதரப்பும் இணக்கம் கண் டுள்ளன. ஜோகூரின் பாசிர் கூடாங் ஆகாயவெளியை நிரந்தர கட்டுப் பாட்டுப் பகுதி என மலேசியா வெளியிட்ட அறிவிப்பையும் சிலேத்தார் விமான நிலையத்தில் விமானங்களுக்கான புதிய தரை இறங்கும் முறை குறித்த சிங்கப்பூரின் ஏற்பாட்டையும் குறைந்தபட்சம் ஒரு மாத காலத்திற்கு நிறுத்திவைக்க இரு நாடு களும் ஒப்புக்கொண்டு உள் ளன.

இதற்கிடையில், இரு நாட்டு போக்குவரத்து அமைச்சர்களும் விரைவில் சந்தித்து விமானப் போக்குவரத்தின் ஆற்றலையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக இருநாட்டு கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதின் அப்துல்லாவும் இரு தரப்பு விவகாரங்கள் குறித்து நேற்று ஒன்றாக ஆலோசனை நடத்தினர். சிங்கப்பூரில் நேற்றுக் காலை இச்சந்திப்பு நிகழ்ந்தது. அதன் பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அண்மைக்காலமாக, கடல், ஆகாய எல்லைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் பூசல்கள் நிலவி வந்தன. துவாஸ் கடல் எல்லை, தெற்கு ஜோகூரின் ஆகாயவெளி பயன் பாடு ஆகியன தொடர்பான சர்ச்சைகள் அவை.