'சிங்ஹெல்த் இணையத் தாக்குதலை தவிர்த்திருக்க முடியும்'

இணையப் பாதுகாப்பு விவகாரம் தொடர்பிலான நிர்வாக வெளிப் படைத்தன்மை இன்மையும் நிறு வன ரீதியான குறைபாடுகளும் சிங்கப்பூரில் மோசமான தரவு ஊடுருவலுக்கான காரணிகளுள் அடங்கும் என்று சிங்ஹெல்த் இணையத் தாக்குதல் விசா ரணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் நடைபெற்ற அத் தாக்குதலின் தொடர்பில் விசா ரணை நடத்திய உயர்மட்டக் குழு, கடந்த ஆகஸ்டில் புதிதாக இயற்றப்பட்ட இணையப் பாது காப்புச் சட்டத்தின்கீழ் நிர்வாக வெளிப்படைத் தன்மை தேவைப் படும் ஓர் அம்சம் என்று விளக் கியது.

மேலும், சிங்ஹெல்த் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த தகவல் உள்கட்டமைப்பை நடத்துவோர் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாவது மறுஆய்வு செய்யும் வகையிலான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் இணையப் பாதுகாப்பு மிரட்டல் களுக்கு எதிராக தகவல்களைப் பாதுகாக்க அதுபோன்ற நட வடிக்கை உதவும் என்றும் குழு தெரிவித்துள்ளது. 2019-01-10 06:00:00 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இவ்வாண்டின் தமிழ்மொழி விழா தொடக்க நிகழ்ச்சி மீடியகார்ப் வளாக எம்இஎஸ் அரங்கத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. (முதல் வரிசையில் வலமிருந்து) வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் சு மனோகரன், தமிழ்மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவின் துணைத் தலைவர் டாக்டர் சந்துரு, வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் ஆர் ராஜாராம், அமைச்சர் எஸ் ஈஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விக்ரம் நாயர், முரளிதரன் பிள்ளை, மீடியகார்ப் தலைமை நிர்வாக அதிகாரி தாம் லோக் கெங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.  படம்: தமிழ் முரசு

25 Mar 2019

கோலாகலமாக தொடங்கிய தமிழ்மொழி விழா