தெம்பனிஸில் பயங்கரவாதத் தாக்குதல் பாவனைப் பயிற்சி

குண்டு வெடிப்பும் துப்பாக்கி சுடும் சத்தமும் அதிரச்செய்தன. புகை மண்டலமாகக் காட்சித் தந்தது தெம்பனிஸ் வெஸ்ட் எம்ஆர்டி நிலையம். டௌன்டவுன் தட ரயில் நிலையத்தில் நேற்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் பாவனைப் பயிற்சியின் ஒரு பகுதியே இவை. 
துப்பாக்கி ஏந்திய இரண்டு பேருடன் தற்கொலைத் தாக்குதல் காரர் ஒருவரும் தாக்குதல் மேற் கொண்டால் அவர்களை எவ்வாறு சமாளிப்பது என்பதை இந்தப் பயிற்சி காட்டியது.
‘குயிக்சேண்ட்’ என்று பெயரி டப்பட்ட இந்த பொதுப்போக்கு வரத்துக்கான நெருக்கடி கால பயிற்சியை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்படை, நிலப்போக்கு வரத்து ஆணையம் மற்றும் எஸ்பி எஸ் டிரான்ஸிட் ஆகிய அமைப்பு களின் ஆதரவுடன் சிங்கப்பூர் போலிஸ் படை நடத்தியது. இந்த பாவனைப் பயிற்சியில் மேற்கண்ட  அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 120 பேர் கலந்துகொண்டனர்.
இந்த பயிற்சி நேற்று பிற்பகல் ஒரு மணிக்குத் தொடங்கியது. பொதுவிடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகமானோர் கூடியிருந்த தெம்பனிஸ் வெஸ்ட் எம்ஆர்டி நிலையத்திற்குள் திடீ ரென துப்பாக்கி ஏந்திய இருவர் நுழைந்தனர். 
அவர்கள் முதுகில் கனமான பைகளைக் கட்டியிருந்தனர். அவர் களைக் கண்டதும் ரயில் நிலையத் தின் பாதுகாப்பு அதிகாரிகள் அந்தத் துப்பாக்கிக்காரர்களைப் பிடிப்பதற்காக முயற்சி செய்யும் போது அந்தத் துப்பாக்கிக்காரர்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். சம்பவ இடத்தில் சிக்கிக்கொண்ட மூன்று பயணிகள் ஒரு சுவருக்குப் பின்னால் ஒளிந்தவாறு 71999 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி போலிசுக்கு இது குறித்து தெரிவித்தனர். 
அந்த மூன்று பயணிகளில் ஒருவர் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. அவருக்கு மற்ற இரு பயணிகளும் முதலுதவி சிகிச்சை மேற்கொண்டனர். 
தகவல் கிடைத்த போலிசார் சற்று நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்து துப்பாக்கிக்காரர்களைக் கட்டுப்படுத்தினர். 
துப்பாக்கிக்காரர்களுடன் வந்த மூன்றாமவன் தன் உடம்பில் மறைத்து வைத்திருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்தான். இருப்பினும் பயணிகள் அனை வரும் ஆபத்தின்றி காப்பாற்றப்பட் டனர். இந்த பாவனைப் பயிற்சி சுமார் 40 நிமிடங்கள் நடத்தப்பட் டன. பயங்கரவாதத்திற்கு எதிரான இதேபோன்ற பாவனைப் பயிற்சி கடந்த 2014ஆம் ஆண்டு டோபிகாட் எம்ஆர்டி நிலையத்தில் நடத்தப்பட்டது. 
டௌன்டவுன் எம்ஆர்டி நிலையத்தில் பயங்கரவாத பாவனைப் பயிற்சி நடத்தப்படுவது இதுவே முதல்முறை.
இந்த பாவனைப் பயிற்சியை சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிப்ளி பார்வை யிட்டார். இந்தப் பயிற்சி குறித்து கூறிய அமைச்சர் மசகோஸ், “எப்போதும் தயார்நிலையில் இருப்பது மிகவும் முக்கியம். 
“பயங்கரவாதத் தாக்குதல் நிகழக்கூடும் என்பதை இது போன்ற பயிற்சிகள் மக்களுக்கு உணர்த்தும்,” எனக் கூறினார். 
“இதுபோன்ற பயங்கரவாதிகள் சிங்கப்பூரைத் தளமாகப் பயன் படுத்திக்கொண்டு செயல்படு வதைத் தவிர்ப்பதற்கு நாம் இயன்றவரை தயாராக இருக்க வேண்டும்,” என்று அமைச்சர் மசகோஸ் கூறினார்.