சுடச் சுடச் செய்திகள்

வெளிநாட்டு ஊழியர் விகித குறைப்பு, வீடமைப்பு போன்றவை இந்திய சமூகத்தின் அக்கறை

வெளிநாட்டு ஊழியர் விகித குறைப்பு, நடுத்தர வருமானப் பிரி வினருக்கான சலுகைகள், மத்திய சேம நிதிக்கான அவசியம், வீட மைப்பு, கல்விச் செலவு போன்ற வற்றைச் சார்ந்த விவகாரங்கள் நேற்று முன்தினம் வரவுசெலவுத் திட்டம் குறித்த கலந்துரையாடலில் எழுப்பப்பட்டன. 
போக்குவரத்து மற்றும் தொடர்பு தகவல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரியின் தலைமையில் இந்நிகழ்ச்சி நடந்தேறியது. 
இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர் விகித குறைப்பு குறித்து எழுந்த கேள்வி களுக்குப் பதிலளித்த டாக்டர் ஜனில், பொதுவாக குறுகிய காலத்தில் நிறுவனங்களுக்கு இது ஒரு சவாலாக இருக்கும் என்பதை அரசங்கம் புரிந்துகொள்கிறது என்றும் இதனால் நிறுவனங் களுக்கு உற்பத்தித்திறன் அதிக ரித்தாலோ செயலாற்றல் கூடி னாலோ நிறுவனங்கள் நாள டைவில் உருமாறி சிங்கப்பூரர் களுக்கு அதிக வேலை வாய்ப்பு களை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்றும் கூறினார்.  

“சிங்கப்பூரர்களுக்கு நியாய மான வழியில் வேலைவாய்ப்புகள் இருக்க வேண்டும். வெளிநாட்டு ஊழியர் விகித வரம்பு சிங்கப்பூரர் களையும் ‘எஸ்பாஸ்’ வைத்து இருக்கும் வெளிநாட்டு ஊழியர் களையும் சரியான அளவில் தொழில்துறைக்குக் கொண்டுவர முயற்சி செய்கிறது. தேவைக்கேற்ப அதை மாற்றுவது அவசியமா கலாம்,” என்றார் டாக்டர் ஜனில்.
வரவுசெலவுத் திட்டத்தைத் தவிர்த்து இந்தியர்கள் எதிர் நோக்கும் சவால்கள் குறித்தும் பல கேள்விகள் கேட்கப்பட்டன. 
மத்திய சேம நிதியின் அவசியம் குறித்து ஒரு கேள்வி எழுப்பப் பட்டது. மற்ற முதலாம் உலக நாடு களில் இல்லாத இந்தத் திட்டம் சிங்கப்பூரில் இருப்பதாகவும் நிதியைச் சரியாக பராமரித்துக் கொள்ளும் தன்மையுடையோர் ஏன் இன்னும் இந்த திட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.