சுடச் சுடச் செய்திகள்

மசே நிதி விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்படும்

மத்திய சேம நிதியின் மூலம் பழைய வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை வாங்குவதற்கான விதிமுறைகளைத் தளர்த்துவது குறித்து தமது அமைச்சு ஆராய்ந்து வருவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரி வித்திருக்கிறார்.
விதிமுறைகளில் செய்யப்படும் மாற் றங்கள் வரும் மே மாதத்தில் அறிவிக் கப்படும் என்று திரு வோங் நாடாளு மன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார்.
அவற்றில் ஒன்று, 60 ஆண்டு களுக்கும் குறைவான குத்தகைக் காலம் உள்ள வீவக வீடுகளை மறு விற்பனை மூலம் வாங்குவதில் மசே நிதியைப் பயன்படுத்துவதற்கான கட்டுப் பாடு என்று அமைச்சர் வோங் குறிப் பிட்டார்.
எவ்வளவு கடன் வழங்கலாம் என்பதை மதிப்பிடும்போது சில வங்கி கள் இத்தகைய கட்டுப்பாடுகளையும் கவனத்தில் கொள்கின்றன. இதன் விளைவாக, அத்தகைய பழைய வீடு களை வாங்குவதற்குப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் மசே நிதியின் அளவும் கிடைக்கும் கடன்தொகையின் மதிப்பும் குறைக்கப்படுகின்றன என்று திரு வோங் சொன்னார்.
“பழைய வீடுகளை வாங்குவோரின் ஓய்வுக்காலத் தேவைகளுக்குப் போது மான தொகையைப் பாதுகாத்து வைக்க வேண்டும் எனும் நோக்கிலேயே மசே நிதி விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், அது வேறு சில விளைவுகளுக்கும் இட்டுச் செல்கிறது. எடுத்துக்காட்டாக, 39 ஆண்டு குத்தகை முடிந்த ஒரு வீட்டை வாங்க ஒருவர் முழுமையாக மசே நிதியைப் பயன் படுத்திக்கொள்ளலாம். ஆனால், ஓர் ஆண்டுக்குப் பின் அந்த வீட்டை வாங்க வேண்டுமெனில் மசே நிதியைப் பயன் படுத்த கட்டுப்பாடு உள்ளது,” என அவர் சுட்டினார்.