ஆஸ்திரேலியர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச்சூடு நடத்தி 49 பேரைக் கொன்று குவித்த தாகச் சந்தேகிக்கப்படும் பிரன்டன் ஹாரிசன் டரன்ட் என்ற 28 வயது ஆஸ் திரேலியர் மீது நீதிமன்றத்தில் நேற்று கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது.
கைகளில் விலங்கிடப்பட்டு, கைதி களுக்கான வெள்ளைச் சீருடையுடன் நீதிமன்றத்திற்கு அவன் அழைத்து வரப்பட்டான். அவன் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தன்னைப் பிணையில் விடுவிக்கும்படி நீதிமன்றத்தில் அவன் கோரவில்லை. விசாரணைக் காவலில் இருக்கும் அவன் அடுத்த மாதம் 5ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.
அவனுடன் மேலும் இருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்குமுன் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்ட தாக எந்தப் பதிவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஐந்து துப்பாக்கிகளும் துப்பாக்கி வைத்திருப்பதற்கான ஓர் உரிமமும் டரன் டிடம் இருந்ததாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் கூறினார்.
“நியூசிலாந்தின் துப்பாக்கிக் கட்டுப் பாட்டு சட்டங்களில் திருத்தம் செய்யப் படும்,” என்றார் திருவாட்டி ஜெசிண்டா.
டரன்ட் வைத்திருந்த துப்பாக்கிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுபோல் தெரி கிறது என்ற அவர், அவனது கார் முழுக்க ஆயுதங்களாக இருந்ததால் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் முனைப் புடன் அவன் இருந்திருக்க வேண்டும் என்றும் சொன்னார்.
முதலில் தாக்குதல் நிகழ்ந்த அல் நூர் பள்ளிவாசலில் இருந்து சடலங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் பாதிக்கப்பட்டோருக்கு நிதியாதரவு வழங் கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
1980களில் ஆப்கானிஸ்தானிலிருந்து நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்த திரு தாவூத் நபி, 71, என்பவரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார். மாண்ட வர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து வருகிறது.