சாலைப் பணிகளுக்கு புதிய விதிமுறைகள்

நிலத்தடி கம்பிவடங்கள் வெட்டுப் பட்டு அதனால் ஏற்படும் சேவைத் தடங்கலை குறைக்கும் நோக்கத் துடன் இவ்வாண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் நிலத்தடி தொலைத் தொடர்பு கம்பி வடங்கள் இருக்கும் பகுதி களுக்கு அருகே சாலைப் பணிகள் மேற்கொள்ளும் குத்த கைக்காரர்கள் புதிய விதிமுறை களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
அவர்கள் இனி தாங்கள் மேற்கொள்ளும் சாலைப் பணிகள் தொடர்பில் கம்பி வடங்கள் பொருத்தப்பட்டிருக்கும் திட்ட வடிவங்களைப் பெறுவதுடன் கம்பிவடங்களை அடையாளம் காணக்கூடிய சான்றிதழ் பெற்ற ஊழியர்களைக் கொண்டு கம்பி வடங்கள் பொருத்தப்படிருக்கும் இடங்களைத் தெளிவாக அடை யாளப்படுத்த வேண்டும். இதன் பின்னரே அங்கு சாலைப் பணி களை குத்தகைக்காரர்கள் தொடங்க முடியும்.
இதைத் தொடர்ந்து, குத்த கைக்காரர்கள், கம்பிவட ஊழி யர்கள், தொலைத்தொடர்பு நிறு வன அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று கூட்டாக சந்திப்புக் கூட்டங்களை நடத்துவதுடன் கம்பிவடங்கள் பொருத்தப்பட்ட இடங்களை உறுதிசெய்யும் பொருட்டு நிலத்தில் துளை போட்டு சோதனை நடத்த வேண்டும். 
இந்த விதிமுறைகளை மீறு வோர் தொலைத் தொடர்பு சட்டத்தை மீறியவர்களாகக் கருதப்படுவார்கள்.