‘சிங்கப்பூர்-சீனா உறவில் வளர்ச்சி’

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு நல்ல நிலை யில் வளர்ச்சியடைந்து வருகிறது என்று சீனத் தலைநகர் பெய்ஜிங் சென்றிருக்கும் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்து உள்ளார்.
சீனத் துணைப் பிரதமர் சுன் சுன்லானுடன் நேற்று நடத்திய சந்திப்பில் திரு தர்மன், இரு நாட்டுத் தலைவர்களின் நிலை யான வருகைப் பரிமாற்றங்களைச் சுட்டினார்.
அந்த வகையில், பிரதமர் லீ சியன் லூங்கும் துணைப் பிரதமர் டியோ சீ ஹியனும் அடுத்த மாதம் சீனாவுக்கு வருகை மேற்கொள்ள இருக்கின்றனர் என்றும் திரு தர்மன் தெரிவித்தார். 
“நீங்கள் குறிப்பிட்டதுபோல, இரு நாடுகளின் உறவுகள்  நல்ல நிலையில் வளர்ந்து வருகின்றன,” என்று சீனத் துணைப் பிரதம ருக்குப் பின்னர் பேசிய திரு தர்மன் சொன்னார்.
சீனாவுக்கு ஐந்து நாள் பயணம் மேற்கொண்டிருக்கும் திரு தர்மன், நேற்று ஸே„ங்னான்ஹாய் தலை மைத்துவ வளாகத்தில் திருவாட்டி சுன்னைச் சந்தித்து பேசினார்.
அந்தக் காலத்தில் மன்னர் சியான்லோங்கால் பயன்படுத்தப் பட்ட அரண்மனைகள் உள்ள ஸே„ங்னான்ஹாய் தலைமைத்துவ வளாகம் இன்று வெளிநாட்டு முக் கிய பிரமுகர்களை சீனத் தலை வர்கள் வரவேற்கும் இடமாகப் பயன்படுத்தப்படுகிறது.
“சீனாவும் சிங்கப்பூரும் நட்பு பாராட்டும் அண்டை நாடுகள் மட் டுமல்ல. அவை இரண்டும் முக்கிய மான ஒத்துழைப்புப் பங்காளிகள்,” என்று தமது உரையில் தெரிவித்த சீனத் துணைப் பிரதமர், “திரு தர்மனும் சீனாவின் நல்ல நண்பர்,” என்று வர்ணித்தார்.
“நமது இருதரப்பு உறவுக்கு பொதுமக்களிடமிருந்து நல்ல ஆதரவைப் பெற்றுத் தந்துள்ளது. இரு நாட்டு உயர்மட்ட தலைவர் களின் வருகைகளும் அதிகரித் துள்ளன,” என்றும் திருவாட்டி சுன் மேலும் கூறினார்.
இரு நாட்டுத் துணைப் பிரதமர் களின் சந்திப்பில், சீனாவின் மூத்த அதிகாரிகள், மாநில மன் றத்தின் துணைத் தலைமைச் செய லாளர் டிங் சியாங்யாங், வெளியுறவு உதவி அமைச்சர் சென் சியாவ் டொங் ஆகியோரும் உடன் இருந் தனர்.
திரு தர்மன் இன்று காலை பெய்ஜிங்கிலிருந்து சிங்கப்பூர் திரும்புவார்.
தமது பயணத்தின்போது துணைப் பிரதமர் தர்மன், வருடாந் திர சீன மேம்பாட்டுக் கருத்தரங் கில் பேசினார். அதில் சீனத் தலை வர்களுடன் வர்த்தகத் தலைவர் களும் கல்வியாளர்களும் கலந்து கொண்டனர்.
அத்துடன், சீன மக்கள் வங்கியின் ஆளுநர் யி காங் உட் பட மற்ற சீனத் தலைவர்களையும் நிறுவனங்களையும் திரு தர்மன் சந்தித்தார்.