இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது தலைதூக்கிய வன்முறை

கோல்கத்தா: நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் ஐஏஎஸ் பெண் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேற்குவங்கத்தில் வேட்பாளர் மீது தாக்குதல் நடத் தப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள 12 மாநிலங்களில் 90க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. அச்சமயம் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்ததை அடுத்து, பாதுகாப்புப் படையினர் துரிதகதியில் செயல் பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஒடிசாவில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். 
நேற்று அங்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. புல்பானி பகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார் அதிகாரி சஞ்சுக்தா. அப்போது சாலையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒரு பெட்டி தென்படவே, காரில் இருந்து இறங்கிச் சென்று அதைச் சோதனையிட முற்பட்டார் சஞ்சுக்தா. இச்சமயம் அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் அவரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடினர்.
மேற்கு வங்கத்தில் உள்ள மூன்று தொகுதிகளுக்கு மட்டும் நேற்று தேர்தல் நடைபெற்றது. ராய் காஞ்ச் பகுதியில், வாக்குப்பதிவை பார்வையிடச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மீது கல்வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக வும் கூறப்படுகிறது. வேட்பாளரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. எனினும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 
டார்ஜிலிங் தொகுதியிலும் வன்முறை வெடித்தது. சில இடங் களில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. 
புதுவையில் ஏழு வாக்குச்சாவடி களை முழுக்க முழுக்க பெண்களே நிர்வகித்தனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காணும் இடமெல்லாம் குடையாகக் காட்சியளித்த ஆர்ப்பாட்ட ஊர்வலம். படம்: ராய்ட்டர்ஸ்

18 Aug 2019

ஹாங்காங்கில் போட்டி ஆர்ப்பாட்டங்கள்; ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்தனர்

‘பிக் & கோ’ தானியங்கி சில்லறை வர்த்தகக் கடையில் வாடிக்கையாளர்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதை அமைச்சர் சான் சுன் சிங்குக்கு (வலது) அந்த நிறுவனத்தின் இயக்குநர் அலெக்ஸ் இங் விளக்கினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Aug 2019

தானியங்கி சில்லறை விற்பனைக் கடைகள்

திருமதி புவா ஜியோக்கின் சடலம் இன்று காலை அவரது மகனால் உறுதிசெய்யப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 Aug 2019

துடுப்பு விபத்து: பெண்ணின் சடலம் உறுதி செய்யப்பட்டது