ஆயுதம் அழிக்கும் பேராயுதம்

சிறிய அள­வி­லும் பெரிய அள­வி­லும் எவரும் எதிர்­பா­ராத நேரத்­தில், எதிர்­பா­ராத வழி­களில் உல­கெங்­கும் தாக்­கு­தல்­கள் பெரு­கிக்­கொண்டே இருக்­கின்றன. ஆக அண்மை­யில் துப்­பாக்­கி­யால் சுடப்­பட்டு, கத்­தி­யால் பலமுறை குத்­தப்­பட்டு பரி­தா­ப­மாக உயி­ரி­ழிந்தார் பிரிட்­ட­னின் தொழிற்­கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திருமதி ஜோ காக்ஸ். இரு பிள்ளை­களுக்­குத் தாயான 41 வயது ஜோ காக்ஸின் உயிரைப் பறித்­தது ஒரு தனி­ம­னி­த­னின் வெறித்­த­னம். அர­சி­யல்­வா­தி­கள் தாக்கப்­படு­வதை அதிகம் அறிந்­தி­ராத பிரிட்­டன், வெறுப்பு வெறி­யா­கும் விஸ்­வரூ­பத்தை பெரி­தா­கக் கண்­டி­ராத அந்நாடு இப்போது ஆடிப் போயி­ ருக்­கிறது.

ஒரு வாரத்­திற்கு முன்னர் அமெ­ரிக்­காவை அரண்டு போக வைத்தது ஆர்­லாண்டோ துப்­பாக்­கிச் சூடு சம்ப­வம். அமெ­ரிக்­கா­வில் நடந்­துள்ள ஆகப்­பெ­ரிய வன்முறை சம்ப­வத்­தில் 49 பேரை ஒருவன் துப்­பாக்­கி­யால் சுட்­டுக்­கொன்­றுள்­ளான். அவனை­யும் போலிசார் கொன்­று­ விட்­ட­ தால் அவனது உண்மை­யான நோக்கம் தெளி­வா­கத் தெரி­ய­வில்லை. ஓரினச் சேர்க்கை­யா­ளர்­கள் மீதான வெறுப்பு, ஐஎஸ் பயங்க­ர­வாத இயக்­கத்­தின் பின்னணி போன்றவை இந்தத் தாக்­கு­த­லுக்­குக் கார­ணங்க­ளாக இருக்­க­லாம் எனக் கரு­தப்­படு­கிறது. சென்ற வாரம் மற்றொரு சம்ப­வத்­தில் பிரான்­சில் ஐஸ் பயங்க­ர­வாத அமைப்­பின் ஆத­ர­வா­ளன் நடத்­திய தாக்­கு­த­லில் 42 வயது போலிஸ் அதி­கா­ரியும் அவரது மனை­வி ­யும் உயி­ரி­ழந்த­னர். ­­­பி­ரான்­சில் தீவிர­வாத தாக்­கு­தல்­களைக் கட்­டுப்­படுத்த முடிந்த வரை அனைத்து வழி­களி­லும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படு­கிறது. தலை­வி­ரித்­தா­டும் பயங்க­ர­வாதப் போக்கும் வன்­முறைச் சிந்தனை­களும் உலகின் அமை­தியை­யும் நிம்­ம­தியை­யும் குலைத்­துவிட்டன.

மக்­களின் எதிர்­கா­லத்தில், நாட்டின் நிர்­மா­ணத்தில், மேம்பாட்­டில் அக்­கறையை­யும் முத­லீட்டை­யும் செலுத்த வேண்டிய நாடுகள் தற்­காப்­பி­லும் பாது­காப்­பி­லும் நிதியை­யும் திறன்களை­யும் செலுத்த வேண்டிய கட்­டா­யத்­திற்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளன. உலகப் பரு­வ­நிலை மாறி­விட்­டது என்பது ஏற்­று­கொண்டே ஆக­வேண்­டிய யதார்த்­த­மாக இருப்­ப­து­போல, அவ்­வப்­போது தாக்­கு­தல் அச்­சு­றுத்­தல்­களை­யும் எதிர்­கொள்ள வேண்டும் என்­ப­தும் மிகக் கசப்­பான உண்மை. இதற்கு சிங்கப்­பூர் உட்பட எந்த நாடும் விதி­வி­லக் ­கல்ல. ஆர்­லாண்டோ துப்­பாக்­கிச் சூடு சம்ப­வம் குறித்­துப் பேசிய உள்துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் சிங்கப்­பூ­ரும் சுய தீவிர­வாத போக்குக் கொண்ட­வர்­களி­ட­மி­ருந்து குறிப்­பி­டத்­தக்க மிரட்­டலை எதிர்நோக்­கு­கிறது என்று எச்­ச­ரித்துள்­ளார்.

'எஸ்ஜி' பாது­காப்பு திட்­டத்­தின் முக்கியத்­து­வத்தை­ வலி­யு­றுத்­தி­ய­தோடு, பயங்க­ர­வாத மிரட்­ட­லுக்கு எதிரான போராட்­டத்­தில் மக்­களின் ஒத்­துழைப்பு அவ­சி­யம். இது அரசாங்கம் மட்டுமே செய்­து­வி­டக்­கூ­டிய காரி­ய­மல்ல. ஒட்டு­மொத்த மக்­களும் ஒவ்­வொ­ரு­வ­ரும் ஆயத்­த­மாக இருப்­பது முக்­கி­யம் என்று அவர் கூறி­யி­ருப்­பதை ஒவ் வொரு­வ­ரும் மனதில்கொள்ள வேண்டும். சிறிதும் தொய்­வில்­லாத கண்­கா­ணிப்­பு­டன் அசம்பா­விதங்கள் நிகழும்­ போது அவற்றை எதிர்­கொள்­ளும் தயார்­ நிலை­யில் இருப்­ப­தும் அவ­சி­யம் என்பதை நாம் உணர வேண்டும்.

அதே­நே­ரத்­தில் உல­கெங்­கும் அதி­க­ரித்து வரும் தாக்கு­தல்­க­ளால் உலக மக்­களும் சிங்கப்­பூ­ரர்­களும் எதிர்­கொள்­ளும் மற்றொரு ஆபத்து, குறிப்­பிட்ட சமயம், இனம், பிரி­வி­னர் மீதான வெறுப்பு வளர்­வது. அதனால் அந்த சமயம், இனத்தைச் சார்ந்த­வர்­கள் ஒதுக்­கப்­படு­வ­தும் அவர்­கள் மீது நம்­பிக்கை­யி­ழப்­ப­தும் பிரச்­சினையை மேலும் வளர்க்­கவே செய்யும். தூற்­று­த­லும் வெறுப்­பும் அதை மேலும் ஊதிப் பெருக்­கும். எந்தவொரு சமூ­கத் தையும் ஒதுக்­கு­வது நினைத்­துப் ­பார்க்க முடியாத ஒன்று. அது நியாய உணர்வைப் பெரிதும் பாதிக்­கும்.

ஆபத்­தான உலகில், ஆபத்­தான தரு­ணத்­தில் நாம் வாழ்ந்­து­கொண்­டி­ருப்­பதை தொடரும் தாக்­கு­தல் சம்ப­வங் கள் உணர்த்­திக்­கொண்டே இருக்­கின்றன. இந்­நிலை­யில், எந்த­வொரு சந்தர்ப்­பத்­திலும் வெறுப்பு எனும் விஷக் ­கி­ருமி உயிர்­பெ­றா­மல் முளைக்­கும்­போதே அதை ஒழித்து, சமுதாய ஒருங்­கிணைப்பைக் கட்­டிக்­காப்­ப­தற்­கான அனைத்து நட­வ­டிக்கை­களை­யும் மேற்­கொள்­வது அர­சாங்கங்களின் பொறுப்பு மட்டுமல்ல- மக்கள் ஒவ்­வொ­ ரு­வ­ரின் தார்­மீ­கக் கடமையும்கூட. ஆயு­தங்களை ஒடுக் ­கும் பேரா­யு­தம் மக்­களின் ஒற்­றுமையே.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!