நம்பிக்கையை விதைத்த நாயகன்

'மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது' எனும் பொன்மொழிக்கு சிங்கப்பூர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. வளங்கள் ஏதும் இல்லாத நிலையிலும் மனிதவளம் ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, மூன்றாவது உலக நாடாக இருந்ததை முதல் உலக நாடுகளில் ஒன்றாக மாற்றிக் காட்டி, பொருளியல் வளர்ச்சியில் வளர்ந்த நாடுகளையே வாய்பிளக்க வைத்த பெருமைக்கு உரியது நம் நாடு.

கல்வி கேள்விகளிலும் விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியிலும் முன்மாதிரி நாடாகத் திகழ்ந்துவரும் நம் நாடு விளையாட்டிலும் முத்திரை பதிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது நீச்சல் நாயகன் 21 வயது ஜோசஃப் ஸ்கூலிங்கின் இமாலய வெற்றி.

ஒலிம்பிக்கின் மிகச் சிறந்த வீரராக அறியப்படும் அமெரிக்க நீச்சல் சகாப்தம் மைக்கல் ஃபெல்ப்சை முன்னுதாரணமாகக் கொண்டு அவர் போல உலகப் புகழ் பெறவேண்டும் என்று சிறு வயதிலேயே கனவு கண்ட ஸ்கூலிங், 'குருவை வென்ற சீடனாக' உயர்ந்திருக்கிறார். 100 மீ. வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் ஃபெல்ப்ஸ், சாட் லி குளோஸ், லாஸ்லோ சே போன்ற முன்னணி நீச்சல் வீரர்களை எல்லாம் முந்திச் சென்று புதிய சாதனையுடன் ஒலிம்பிக் வரலாற்றில் சிங்கப்பூருக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார் ஸ்கூலிங்.

எதிராளிகள் எவ்வளவு வல்லவர்களாக இருந்தாலும் அதைக்கண்டு மலைக்கத் தேவையில்லை. உள்ளத் துணிவும் உறுதியான நம்பிக்கையும் இருந்தால் மலை யையும் தாண்டலாம் என்பதை அவர் உணர்த்தி இருக்கிறார். ஒரே நாளில் உலகப் புகழ் பெற்றபோதும், 'இந்த வெற்றித் தருணம் எனக்கானது அல்ல, என் நாட்டிற்கு உரியது' என்று தன்னடக்கத்துடன் கூறி, தன் நாட்டுப்பற்றையும் வெளிப்படுத்தி, சிங்கப்பூரின் உன்ன தத்தை உலகிற்கு உணர்த்தினார் 'தங்க மகன்' ஸ்கூலிங்.

அவரது மகத்தான வெற்றியில் நாடே பெருமையில் பூரித்துப் போயுள்ளது. அவரது வெற்றியை அங்கீகரித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மறக்க முடியாத நிகழ்வு. பள்ளி, கல்லூரிகளில் பெறும் மதிப்பெண்களும் தர நிலைகளும்தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் என்ற எண்ணம் சிங்கப்பூர் பெற்றோர்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள நிலையில், விளையாட்டு உள்ளிட்ட மற்ற துறைகளிலும் சாதிக்க முடியும் என்பதற்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளார் ஸ்கூலிங்.

அவரது இந்த வெற்றி, சிங்கப்பூர் பெற்றோர்களிடமும் மாணவர்களிடத்திலும் எண்ண மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது. ஸ்கூலிங்கின் வரலாற்றுச் சாதனை யைக் கண்ட உத்வேகத்தில் தனக்குப் பிடித்தமான திடல்தட விளையாட்டில் சாதிக்கவேண்டும் என்ற உறுதியுடன் உடனடியாக விளையாட்டுத் திடலுக்குச் சென்று பயிற்சியைத் தொடங்கிய சாஷென் ஜெரமையா முரளி எனும் சிறுவனே இதற்குச் சான்று.

அத்துடன், நீச்சல் பயிற்சிப் பள்ளிகளைத் தேடி வருவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து இருப்பதும் சிங்கப்பூர் பிள்ளைகளிடம், பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ள புது மாற்றத்திற்கான அறிகுறியாகத் தெரிகிறது. இது தொடரவேண்டும்.

ஆயினும், ஒரே நாளில் ஸ்கூலிங்கின் வெற்றி சாத்தியமாகவில்லை என்பதையும் அவர்கள் உணர வேண்டும். ஸ்கூலிங்கின் வெற்றிக்குப் பின்னால் கடுமையான பயிற்சியும் விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் இருக்கிறது என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது.

பெற்றோர்கள் தங்களுடைய விருப்பங்களைப் பிள்ளை களிடம் புகுத்தாமல், அவர்களுக்கு எத்துறையில் ஆர்வமும் ஈடுபாடும் இருக்கிறதோ, அதில் அவர்கள் சிறந்தவர்களாக உருமாற ஆதரவும் ஊக்கமும் தர வேண்டியது அவசியம்.

திறமையானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்கி, போதிய வசதிகளை ஏற்படுத்தித் தந்து, அவர்களை உலகம் போற்றும் மாவீரர்களாக, சாதனையாளர்களாக உருவாக்குவதில் அரசாங்கத்திற்கும் பெரும்பங்குண்டு.

சி.குணாளன், பி.சி.சுப்பையா முதல் 2012ல் டிப்னா லிம் பிரசாத் வரை இந்திய சமூகத்தில் இருந்தும் பலர் ஒலிம்பிக்கில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துள்ளனர். அந்த வகையில் இன்னும் பலர் விளையாட்டில் சாதித்து சிங்கப்பூருக்கும் சிங்கப்பூர் இந்திய சமுதாயத்திற்கும் பேரும் புகழும் தேடித் தருவர் என்று நம்புவோம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!