விரைந்து வளரும் உறவு

சிங்கப்பூர்- கோலாலம்பூர் அதிவேக ரயில் திட்டம் இரு அண்டை நாடுகளுக்கும் இடையேயான உறவில் மற்றொரு மைல்கல். இரு நாட்டு இணைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த வாரம் கையெழுத்தான இந்த உடன்பாடு இருநாட்டு உறவை புதிய மேல்நிலைக்கு எடுத்துச் செல்லும்.

இது பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்ட பெருந் திட்டம். ஜோகூர் நீரிணைக்கு மேல் 25 மீட்டர் உயரத்தில் அமையவுள்ள இந்த 350 கிலோமீட்டர் ரயில் பாதை, 1923ல் கட்டப்பட்ட முதல் ஜோகூர் பாலம், 1998ல் அமைக்கப்பட்ட இரண்டாவது பாலத்துக்குப் பின்னர் இரு நாடுகளையும் பிணைக்கும் மிகப் பெரிய இணைப் பாகும். 2026 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்த அதிவேக ரயில் சேவையில் ஜூரோங் ஈஸ்ட்டிலிருந்து கோலாலம்பூருக்கு 90 நிமிடங் களில் சென்றுவிடலாம்.

மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே அன் றாடம் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கானோருக்கு இது ஒரு பெரும் வரப்பிரசாதமாக அமைவதுடன் அத்தகைய பயணங்கள் அதிகரிக்கவும் வழிவகுக்கும். தற்போது கோலாலம்பூர் - சிங்கப்பூர் வாகன பயணத் துக்கு 5 மணி நேரம் வரையும் ரயில் பயணத்துக்கு 7=8 மணி நேரம் வரையும் ஆகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!