சிறிய, நடுத்தர நிறுவனங்களின் கடமை

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் பாதி அளவுக்குப் பொறுப்பு வகிப்பவை சிறிய, நடுத்தர நிறுவனங்கள். அவை ஊழியர்களில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு வேலை வழங்குகின்றன. மொத்தத்தில் அவை சிங்கப்பூர் பொருளியலின் முக்கிய அங்கமாக, முதுகெலும்பாக இருக்கின்றன.

ஆனால் இன்று உலக நிலவரம் வேகமாக மாறுகிறது. தொழில்துறைகள் உருமாறுகின்றன. அதற்கு ஏற்ப நிறுவனங்கள் குறிப்பாக, இத்தகைய நிறுவனங்கள் தலை கீழாக மாறவேண்டிய கட்டாயத்தை உலகச்சூழல் ஏற்படுத்திவிட்டது.

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உலகக் கண்ணோட் டம் என்பது முன் எப்போதையும்விட இப்போது பெரிதும் தேவையானதாக பரிணமித்து இருக்கிறது. சிங்கப்பூரின் உள்நாட்டுச் சந்தை மிகவும் சிறியது என்பதால் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அனைத்துலக மயமாகவேண்டியது அவசியமாகிவிட்டது. அதற்கு நிதி தேவைப்படுகிறது. நிறுவனங்கள் போட்டித்திறனுடன் திகழ வேண்டும். இதற்குப் புத்தாக்கம் தேவை. மின்னிலக்கமயமாக வேண்டும். உற்பத்தித்திறன் உயர வேண்டியதும் அவசியம். இவை எல்லாம் இருந்தால் மட்டும் போதாது. இத்தகைய நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களின் தேர்ச்சி ஆழமாகவேண்டும். நடப்பு உலகுக்கு, சந்தை நிலவரத்துக்கு ஏற்புடையதாக தேர்ச்சிகள் இருக்கவேண்டும்.

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் இந்தச் சவால்களைச் சமாளித்து நீண்டகாலபோக்கில் அவை நிலைத்து இருக்கவேண்டும். சிங்கப்பூரர்களுக்குத் தொடர்ந்து நல்ல வேலைகளை அவை வழங்க வேண்டும். பொரு ளியலுக்குப் பலம் சேர்க்க வேண்டும் என்பதால் அந்த நிறுவனங்களுடன் சேர்ந்து இதைச் சாதித்து முடிக்க அரசாங்கம் திட்டவட்டமாக உறுதி பூண்டுள்ளது.

விவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!