வெள்ளை மாளிகை அரவணைப்பில் மோடி

இந்திய பிரதமராக 2014ல் பதவி ஏற்ற நரேந்திர மோடி, 2017 ஜூன் நிலவரப்படி ஆறு கண்டங்களில் 30 வெளி நாட்டுப் பயணங்களை மேற்கொண்டு 48 நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். அமெரிக்காவுக்கு மட்டுமே ஐந்து தடவை போனார். இருந்தாலும் அமெரிக்காவின் புதிய அதிபரான டோனால்ட் டிரம்ப்பை மோடி சந்தித்த அண்மைய பயணம்தான் அவரின் அமெரிக்க பயணங்களி லேயே மிகவும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருக்கிறது.

அமெரிக்காவில் இதுவரை இல்லாதபடி வேறுபட்ட சிந் தனைகளுடன், 'அமெரிக்கர்களுக்கே, அமெரிக்காவுக்கே முதல் சலுகை' என்ற தன்னைப்பேணித் தனப்போக்கை கைகொள்ள முயன்றுவரும் டிரம்ப், 'நான் வெற்றிபெற்றால் வெள்ளை மாளிகையில் உண்மையான ஒரு நண்பனாக இந்தியா இருக்கும்' என்று அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது பகிரங்கமாக அறிவித்து இருந்தார்.

பிரதமர் மோடியை திங்கட்கிழமை வெள்ளை மாளிகை யில் சந்தித்தபோது 'உண்மையிலேயே அமெரிக்காவின் உண்மையான ஒரு நண்பர் இங்கு வந்திருக்கிறார்' என்று அவர் வர்ணித்தார். இந்திய பிரதமரைக் கட்டிப்பிடித்து தழுவிக்கொண்டார் டிரம்ப்.

அமெரிக்க இந்தியா நட்பு இப்போது இருப்பதைப் போல் இவ்வளவு சிறப்பாக இதுவரையில் இருந்ததே இல்லை என்றுகூட அமெரிக்க அதிபர் குறிப்பிட்டார்.

அதேவேளையில், 'இந்தியாவில் தயாரிப்போம்' என்ற இயக்கத்தைத் தொடங்கி உள்ள இந்தியப் பிரதமரோ, அமெரிக்க அதிபருடன் நட்பை வளர்த்துக்கொள்ள தான் திட்டவட்டமாக இருப்பதை உணர்த்தும் வகையில், இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் நடக்க இருக்கும் தொழில்முனைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும்படி அமெரிக்க அதிபரின் மகளுக்கு அழைப்பு விடுத்தார். மேம்பாடு, வளர்ச்சி, செழிப்பு ஆகியவற்றைச் சாதிக்க இரு நாடுகளும் மேற்கொள்ளும் கூட்டு முயற்சியில் ஆற்றல் மிகுந்த, உறுதியுடன்கூடிய, திட்டவட்டமான பங் காளியாக இருக்கப்போவதாக மோடி சூளுரைத்தார். பாகிஸ்தானின் ஆதரவுடன் காஷ்மீரில் செயல்படும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவர் சையத் சலாவுதீனை அனைத்துலக பயங்கரவாதியாக, பிரதமர் மோடி பயணத் தின்போது அமெரிக்கா அறிவித்தது.

இதர நாடுகளில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் அமைப்புகளுக்குப் பாகிஸ்தானில் இடமளிக்கக் கூடாது என்றும் எல்லை கடந்த பயங்கரவாதிகளைச் சட்டத்தின் முன் கொணரவேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்கா எச்சரித்தது. தேசிய அணுசக்தி முகவையிலும் ஐநா பாதுகாப்புக் குழுவிலும் இந்தியா இடம்பெற அமெரிக்க ஆதரவை அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தினார். அதோடு மட்டுமல்ல, சீனா, வடகொரியா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் தொடர்பில் ஒரே கருத்துகளை ஒரு கூட்டறிக்கை மூலம் இந்தியாவும் அமெரிக்காவும் வெளியிட்டன.

இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கையில் டிரம்ப்-மோடி முதல் சந்திப்பு அருமையான ஒரு நல்லுறவு சந்திப்பாகவே தெரிகிறது. இரு நாடுகளின் தலைவர்களும் இப்படி நெருங்கி இருப்பது, உலக அளவில் அமெரிக்காவும் இந்தியாவும் நெருங்கி வருவதையே புலப்படுத்துகிறது. ஆனால் இருதரப்பு நிலையில் இந்தியா - அமெரிக்கா வுக்கு இடையில் எந்த அளவுக்கு நெருக்கம் பலப்படும் என்பதை டிரம்ப் - மோடி சந்திப்பு வெளிப்படுத்தியதாகத் தெரியவில்லை. அண்மைய காலத்தில் ஒரே பரபரப்பாகி விட்ட அமெரிக்காவின் குடிநுழைவுக் கொள்கை- இந்தியர் கள் அமெரிக்காவில் வேலைபார்க்க வழிவகுக்கின்ற- இந்தியாவுக்கு மிக முக்கியமான எச்1பி விசா பற்றிய பேச்சு இரு தலைவர்களின் சந்திப்பில் இடம்பெறாமல் போனது பல சிந்தனைகளைக் கிளப்பிவிட்டுள்ளது. அமெரிக்காவின் முதலீடுகள் அதிகம் இந்தியாவுக்கு வரவேண்டும் என்கிறார் மோடி. அமெரிக்க பொருட் களுக்கு இந்தியா தன் கதவை அகல திறந்துவிடவேண்டும் என்கிறார் டிரம்ப்.

பிரதமர் மோடி-டிரம்ப் சந்திப்பு இரு நாடுகளின் எதிர் பார்ப்பையும் மிஞ்சிவிட்டது. இதுவரை இந்திய பிரதமர்கள் மேற்கொண்ட அமெரிக்க பயணங்களைவிட மோடியின் பயணம் மிகவும் ஆக்கப்பூர்வமாகத் திகழ்கிறது என்கிறது இந்தியா. இரு தலைவர்களின் சந்திப்பு ஆக்ககரமானது என்கிறது அமெரிக்கா. அதேவேளையில், டிரம்ப்-மோடி வெள்ளை மாளிகை சந்திப்பை இரு தரப்புக்கும் வட்டாரத் துக்கும் உலகுக்கும் நன்மை பயக்கும் ஓர் அருமையான நல்லுறவு சந்திப்பாக உலகம் பார்க்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!