மதிப்போடு வாழ மதிப்பெண் மட்டும் போதாது

செல்வங்களுள் அழிவில்லாதது கல்விச் செல்வம். அதனால்தான் வள்ளுவப் பெருந் தகையும் 'கேடில் விழுச்செல்வம் கல்வி' என்றார்.

கல்வியில் சிறந்து விளங்கும் ஒரு நாடு உலக அளவிலும் செழித்தோங்கும் என்பதற்கு சிங்கப்பூரே சிறந்த எடுத்துக்காட்டு. மனித வளத்தை முதன்மையாகக் கொண்டுள்ள போதும் உலகில் மாண்புமிக்க நாடாக நம் நாடு திகழ்வதற்கு கல்வியில் நாம் சிறந் தோங்குவதே காரணம்.

மாறிவரும் தொழில்நுட்ப உலகில் புதுப் புதுத் திறன்களைக் கற்று, காலத்திற்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்வது சிங்கப் பூரர்களின் ஏற்றமிகு வாழ்வு நீடிப்பதை உறுதி செய்யும். அதற்காகத்தான் பள்ளி, கல்லூரி யோடு நிறுத்திவிடாமல் வாழ்நாள் முழுதும் கற்பதை ஊக்குவிக்கும் வகையில் 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' போன்ற திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது.

கல்வி ஒருவரின் அடிப்படைத் தேவை. வாழ்க்கைக்குத் தேவையான நற்பண்புகளை யும் சுயஒழுக்கத்தையும் அடிப்படைத் திறன் களையும் கற்றுத்தருவது கல்விக்கூடங்களே. ஆனால், நாளாவட்டத்தில் மதிப்பெண் களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தரும் போக்குப் பெருகிவிட்டதால் அதைக் களைந்து, கற்றல் என்பது போட்டி இல்லை என்பதை உணர்த்தும் வகையில் அரசாங்கம் அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளையும் மாற்றங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.

கற்றலைச் சுமையென நினைக்காமல், வாழ்க்கைக்காகக் கற்பது சுகம் என்ற எண் ணத்தைப் பிஞ்சுப் பருவத்திலேயே விதைப் பதே அரசாங்கத்தின் நோக்கம். அதை ஒட்டியே கல்வி அமைச்சு நேற்று முன்தினம் சில மாற்றங்களை அறிவித்துள்ளது.ளpட் 'அடுத்த ஆண்டில் இருந்து தொடக்கநிலை இரண்டு வரை பிள்ளைகளுக்குத் தேர்வே இல்லை. மூன்று ஆண்டுகளில் படிப்படியாக தொடக்கநிலை மூன்று, ஐந்து, உயர்நிலை ஒன்று, மூன்று ஆகிய நிலைகளில் மாண வர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து' போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.

வகுப்புகள் உயர உயர, படிக்க வேண்டிய பாடங்களும் கூடும். அதற்கு ஆயத்தமாகும் வகையில் மாணவர்களுக்குப் போதிய கால அவகாசத்தை அளிப்பதற்காக அரையாண்டு தேர்வுகள் நீக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு மட்டுமல்லாது, ஆசிரியர் களுக்கும் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி தரும். தங்கள் மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் எனும் அக்கறை எல்லா ஆசிரியர்களுக்கும் இருக்கும். மாணவர்களின் தனித்திறமைகளை அடை யாளம் காணவும் அத்திறமைகளை அவர்கள் மேலும் வளர்த்துக்கொள்ளும் வழிகளை ஆராயவும் புதுப் புது கற்பித்தல் வழிகளை அறிந்துகொள்ளவும் ஆசிரியர்களுக்கு இந்தச் சில வார காலம் பெரிதும் பயன்தரலாம்.

ஏட்டுக்கல்வியோடு செயல்வழிக் கல்வியும் அவசியம். செயல்வழிக் கல்வியின் மூலமே மாணவர்களின் சிந்திக்கும் திறன் வளரும். அதனால்தான் அரசாங்கம் செயல்வழிக் கல்விக்கு அதிக ஊக்கமளித்து வருகிறது.ளpட் இப்படிச் சொல்வதால் பிஎஸ்எல்இ எனும் தொடக்கநிலை இறுதியாண்டு தேர்வை ரத்து செய்துவிடலாமே என்று ஒரு சிலர் கேட்கலாம். பிள்ளைகளின் கற்றல்திறனை அளவிடவும் உயர்நிலைப் பள்ளியில் பொருத்தமான பாடங்களைத் தேர்ந்தெடுக்கவும் அத்தேர்வு பயனுள்ளதொரு படிக்கல்லாக நீடிக்கிறது.

பிள்ளைகளின் கல்வியில், அவர்களின் எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பதில் பெற்றோருக்கு மிகப் பெரிய பங்குண்டு. அதே நேரத்தில், மதிப்பெண்ணே மாண்பு தரும் என்றெண்ணி, படி படி என அவர்களை வற்புறுத்தாமல், தம் பிள்ளைகளின் திறன்களைக் கண்டறியும் மிகப் பெரிய பொறுப்பும் அவர்களுக்கு உண்டு.

கல்விமுறையில் செய்யப்படும் மாற்றங் களுக்கான காரணங்களையும் அது பிள்ளை களிடத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற் படுத்தும் என்பதையும் பெற்றோர்கள் புரிந்து கொள்ள அரசாங்கமும் உதவவேண்டும். வாழ்க்கையில் முன்னேற நல்ல மதிப்பெண் கள் மட்டும் போதாது. நற்பண்புகளும் சவால் களைத் துணிவோடு எதிர்கொள்ளும் மனப் பான்மையுமே ஒருவரை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும். இதைக் கருத்தில்கொண்டு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை களுக்கு ஆதரவளித்து, அனைவரும் சேர்ந்து எதிர்கால சிங்கப்பூர்த் தலைமுறையினருக்கு ஏற்றமிகு வாழ்வை அமைத்துத் தரவேண்டும் என்பதில் உறுதியாய் இருப்போம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!