நல்லிணக்கத்தை வளர்க்க ஆண்டுகள் ஆகும், அழிக்க வினாடிகள் போதும்

கோபமடைதல் அதிக கோபத்துக்கு இட்டுச் செல்கிறது. இதைத்தான் சமண மதத்தின் 24ஆம் தீர்த்தங்கரரான மகாவீர் 2,500 ஆண்டுகளுக்கு முன் கூறியிருக்கிறார்.

இக்கூற்று இன்றும் நடைமுறைக்கு உகந்ததாக இருப்பதை, அண்மையில் வெளியிடப்பட்டு கண்டனத்துக்கு உள்ளான 'இபேஎஸ்ஜி' விளம்பரமும் அதனைத் தொடர்ந்து உள்ளூர் யுடியூப் பிரபலமான பிரீத்தி நாயரும் அவரது சகோதரரான ரேப் இசைப் பாடகர் சுபாஸ் நாயரும் வெளியிட்ட காணொளியும் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளன.

என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றால் இதோ ஒரு சுருக்கம். மின்னியல் கட்டண இணையத்தளமான 'இபேஎஸ்ஜி' தங்கள் விளம்பரத்தைத் தயாரிக்க ஒரு விளம்பர முகவையை அணுகியது.

வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் 'இபேஎஸ்ஜி' கட்டண முறையைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் ஆகவே இது அனைவருக்கும் ஏற்ற ஒரு மின்னியல் கட்டண முறை என்பதும்தான் அந்த விளம்பரத்தின் கதை.

நான்கு பிரதான இனங்களைப் பிரதிபலிக்க வெவ்வேறு கலைஞர்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அந்த விளம்பர முகவை ஒரு சீனரான மீடியா கார்ப் கலைஞர் டெனிஸ் சுவாவையே நான்கு இனங்களைப் பிரதிபலிப்பதாக நடிக்க வைத்தது. இதில்தான் பிரச்சினை உருவானது.

அதாவது டெனிஸ் சுவாவே முக்காடு போட்ட மலாய் பெண்ணாகவும் கருத்த முகம் கொண்ட இந்திய ஆடவராகவும் நடித்தார்.

இதற்கு முந்தைய பத்தாண்டுகள் காலத்தில் இதுபோன்ற காட்சிகள் யாருடைய மனதையும் புண்படுத்துவதாக இருந்திருக்காது. சிலர் அதை நகைச்

சுவை மனப்பான்மையுடன் எடுத்துக்கொண்டிருப்பார்கள்.

பழைய சிங்கப்பூரர்கள், 1960களிலும் 1970களிலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிளாக் அண்ட் வைட்

மின்ஸ்ட்ரல் ஷோ'வை (Black and White Minstrel Show) விரும்பிப் பார்த்ததை நினைவுகூர்வார்கள். ஆனால் இப்போது சமூகத்தின் கண்ணோட்டம் மாறிவிட்டது.

இன்றைய சூழலில், விளம்பரத்தின் உருவாக்கக் குழுவுக்கு எது சரி எது தவறு என்று தெரிந்திருக்கும் என்றே ஒருவர் நினைக்கக்கூடும். ஆனால் இங்கு அவ்வாறு நடைபெறவில்லை.

மாறாக, அந்த விளம்பரத்துக்கு குறிப்பாக 'ப்ரவுன்ஃபேஸ்' என்று இந்தியரைக் காட்டியது கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அதன் காரணமாக விளம்பரம் மீட்டுக்கொள்ளப்பட்டது.

இந்தப் பிரச்சினை இத்துடன் முடிந் திருக்க வேண்டும் அல்லது முடிந்திருக் கலாம். ஆனால் அவ்வாறு நிகழவில்லை. குமாரி பிரீத்தி நாயரும் அவரது சகோத ரரும் சீன சிங்கப்பூரர்களை இழிவுபடுத் தும் வகையில் ஒரு 'ராப்' காணொளியைத் தயாரித்து வெளியிட்டனர்.

அதில் அவர்கள் சீனர்களை மையமா

கக் கொண்டு நான்கு எழுத்து தகாத

சொல்லையும் இழிவுபடுத்தும் சைகைகளையும் சேர்த்து, காணொளியை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தனர்.

காணொளியில் குமாரி பிரீத்தி, 'Yes, it's because you are Chinese' என்ற எழுதப்பட்ட டி-சட்டையை அணிந்திருந்தார். அது அதற்கு முன் சீனப் பயணி ஒருவருக்கும் கோ-ஜெக் நிறுவனத்தின் மலாய் ஓட்டுநருக்கும் இடையே நிகழ்ந்த கைகலப்பைச் சுட்டிக்காட்டுவதாக இருந்தது.

'ப்ரவுன்ஃபேஸ்' விளம்பரம் மோசமான ரசனைக்குரியது. ஆனால், அதன் பிறகு வெளியான காணொளி எல்லையை மீறியது.

இத்தருணத்தில் சம்பந்தப்பட்ட அமைப்புகள் இதில் தலையிட்டன. காணொளியை வெளியிட்டவர்களிடம் அதை உடனடியாக மீட்டுக்கொள்ளுமாறு தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி காணொளி மீட்டுக்கொள்ளப்பட்டது. காணொளியைப் பார்த்தவர்கள் அதை மேலும் மற்றவர்களிடம் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இச் சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இது ஒரு காணொளிதானே. இப்படிப்பட்ட கடுமையான நடவடிக்கை தேவைதானா; ஒரு பாடலைக் கேலி செய்யும் வடிவம்தான் 'ராப்' இசை. இதை வேடிக்கையாக எடுத்துக்கொள்ளலாமே. இது குறித்து அரசாங்கத்தின் வெளிப்பாடு சற்று அதிகமாகவே உள்ளது என்று சிலர் கேட்கலாம்.

ஆனால் அதில் முக்கியமான சில அம்சங்களை நாம் பார்க்க வேண்டும். இது ஒரு சாதாரண காணொளியாக மட்டும் இருந்திருக்கவில்லை. அதில் கேலியான அம்சங்கள் இருந்ததா இல்லையா என்பது கேள்வியல்ல. அது மற்றவர்களைப் புண்படுத்துவதாக இருந்தது.

அதைவிட, அந்த 'பிரீத்திபிலிஸ்; காணொளியை சமூக ஊடகத்தில் வெளியிட்டவர்கள் அது எப்படிப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று சிறிதும் சிந்திக்கவில்லை.

இந்தக் காணொளியைப் பார்க்கும் சம்பந்தப்பட்டவர்கள் அதை எதிர்க்கும் விதத்தில் இந்தியர்களையோ மற்ற இனத்தவர்களையோ தாக்கும் வகையில் மற்றோர் எதிர்ப்புக் காணொளியைத் தயா ரிப்பார்கள்.

இப்படிப்பட்ட எதிர்ப்புக் காணொளியை அனுமதித்தால் மற்றவர்கள் தயாரிக்கும் எதிர்ப்புக் காணொளியை அனுமதித்துத்தான் ஆக வேண்டும்.

கொட்டிய வார்த்தைகளை அள்ளிவிட முடியாது. அந்த வார்த்தைகள் ஏற்படுத்திய காயங்களை எளிதில் ஆற்றிவிட முடியாது. இது ஒருவரை ஒருவர் வெறுக்கும் உணர்வின் தொடக்கமாக உருவாகி விடும்.

இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது மற்ற நாடுகளில் நிகழ்வதை நாம் பார்த்திருக்கிறோம். அந்தப் பாதையில் நாம் செல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

சிங்கப்பூரில் இன, சமய நல்லிணக்கம் உள்ளது. இதன் காரணமாக விவகாரங்களே அறவே இல்லை என்று சொல்லிவிட முடியாது. பல்வேறு ஆய்வுகள் மூலம் இனம், சமயம், கலாசார வேறுபாடுகள் தொடர்பில் விவகாரங்கள் அவ்வப்போது தலையெடுக்கவே செய்கிறது என்பது புலப்படுகிறது.

இதற்குத் தீர்வு காண்கிறோம் என்று மற்றவர்களைத் தாக்கும் விதத்தில் இழிவுப்படுத்தினால், அது சினத்தை மேலும் வளர்க்கும். மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி சொன்னதுபோல, இரு தவறான செயல்கள் ஒன்றைச் சரியாக்கி விடாது.

கோபமும் வெறுப்பும் மிக எளிதில் உண்டாக்கப்படலாம். ஆனால், அதனால் ஏற்படும் விளைவுகளைச் சரிசெய்ய அதிக காலம் பிடிக்கும்.

மாறாக, நல்லெண்ணத்தையும் அமைதியான உறவுகளையும் வளர்க்க அதிக காலம், சில பத்தாண்டுகள்கூட எடுக்கலாம். ஆனால் அதை அழிக்க ஒரு சில வினாடிகள் போதும்.

சிங்கப்பூரில் நாம் இதுவரை அனு பவித்து வரும் அமைதியும் ஒற்றுமையும் நமது அதிர்ஷ்டத்தால் கிடைத்ததல்ல. மேலும் மற்றவர்களைப் புண்படுத்தாமல் இருப்பதற்காக அனைவரும் மிகுந்த கவனத்துடனும் குற்றமற்ற பராமரிப்புடன் நடந்துகொள்வதாலும் கிடைத்ததல்ல. இதற்கு அண்மைய சம்பவங்கள் சான்று பகரும்.

நமது அமைதிக்கும் ஒற்றுமைக்கும் பங்கம் ஏற்படக்கூடிய சம்பவம் நிகழுமானால், சம்பந்தப்பட்ட அமைப்புகள் அதை களைய நேரடியாகக் களத்தில் இறங்கி அதைக் கட்டுக்குள் கொண்டு வருவதால்தான் அது சாத்தியமாகிறது.

இன நல்லிணக்கத்தைக் கட்டிக்காப்பது ஒரு கடுமையான பணி. அதற்குக் கண்காணிப்பும் பராமரிப்பும் அவசியம். மற்ற இனத்தவர்களின் உணர்வுகளைப் பாதிக்காத வண்ணம் அனைத்து இனங்களும் நடந்துகொள்வதில் ஒருங்கிணைந்த முயற்சி தேவை.

இதில் நாம் பாகுபாடு காட்டாமல் நியாயமான முறையில் நடந்துகொள்வதை உறுதி செய்ய வேண்டும். அதற்குத் தேவை, கடுமையான சட்டங்களும் அதை அமலாக்கப்படுத்துவதில் உறுதியான மனப்பான்மையும்.

ஒரு தவறு நடந்துவிட்டால், அதை அடையாளம் கண்டுகொள்ளும் ஆற்றலும் அதற்காக மனபூர்வமான மன்னிப்பு கோருவதும் முக்கியம்.

இதற்கு மேலும் அதிகம் தேவைப்படுகிறது. அதைப் பிரதிபலிக்கும் வகையில் மகாவீரின் கூற்று அமைந்துள்ளது.

"கோபமடைதல் அதிக கோபத்துக்கு இட்டுச் செல்கிறது. மன்னித்தலும் அன்பும் கூடுதலாக மன்னித்தலுக்கும் அன்புக்கும் இட்டுச் செல்கிறது."

ஓர் உண்மையான பல இன மற்றும் ஒற்றுமை உணர்வுள்ள சமூகமாக நாம் தொடர்ந்து இருக்க வேண்டுமென்றால், நாம் மன்னித்தலில் கவனம் செலுத்துவதை விடுத்து, அன்பில் கவனம் செலுத்த வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!