சிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்

நடந்து முடிந்த தேர்­தல் மூலம், இளம் வாக்­காளர்கள் மக்­கள் செயல் கட்­சிக்கு ஒரு செய்­தியை தெரி­வித்து இருக்­கிறார்கள். பெண் வேட்­பா­ளர்­கள் தேர்­த­லில் நல்ல முறை­யில் சாதித்து இருக்­கி­றார்­கள்.

2020 பொதுத் தேர்­தல், மக்கள் செயல் கட்­சிக்கு ஒரு தோல்வி என்று சில வெளி­நாட்டு கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கி­றார்­கள்.

ஆனால் அவர்­கள் கூறு­வது தவறு.

மக்­கள் செயல் கட்சி ஜூலை 10ஆம் தேதி நடந்த தேர்­த­லில் 93 இடங்­களில் 83 இடங்­க­ளைக் கைப்­பற்­றி­யது. 61.2 விழுக்­காட்டு வாக்­கு­க­ளைப் பெற்­றது.

எந்­த­வொரு ஜன­நா­யக நாட்­டி­லும் இத்தகைய வெற்றி என்­பது தனிச்­சி­றப்பு­மிக்க ஒன்­றாகக் கரு­தப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூர் ஒரு ஜன­நா­யக நாடு. வேறு வகை அர­சாங்­கம் இங்கு இல்லை என்பதை நமக்கு நாமே நினை­வூட்டி கொள்ள வேண்­டி­யது முக்­கி­ய­மா­னது.

புறக் கண்­ணோட்­டம்

இந்தத் தேர்­தல் முடி­வு­கள் மசெகவுக்குப் பேரி­டர் என்று ஆஸ்­தி­ரே­லி­யா­வின் ஃபிலிண்­டர்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த பேரா­சி­ரியர் மைக்­கல் பார் வர்ணித்­தார்.

மலே­சியா நாட்­டிங்­ஹம் பல்­கலைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த பேரா­சி­ரி­யர் பிரி­ஜட் வெல்­சும் தைவான் தேசிய பல்­கலைக்­க­ழ­க­மும் தேர்­தல் முடி­வு­களை மசெ­க­வுக்கு சங்­க­ட­மான ஒரு தோல்வி என்று வர்­ணித்­துள்­ளன.

இது எனக்கு அதிர்ச்­சி­யாக உள்ளது.

இவை எல்­லாம் நியா­ய­மான மதிப்­பீ­டு­கள்­தானா?

ஆஸ்­தி­ரே­லியா, பிரிட்­டன், இந்­தியா நாடு­களில் வெற்றி பெற்ற கட்­சி­க­ளின் செயல்திற­னை­யும் மசெ­க­வின் தேர்­தல் செயல்திற­னை­யும் ஒப்­பிட்டு பார்ப்­போம்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் 2019ல் நடந்த தேர்­தலில் பிர­த­மர் ஸ்காட் மோரி­ச­னின் கூட்டணி 151 இடங்­களில் 77ல் வெற்றி பெற்­றது. அது பெற்ற வாக்­கு­கள் 41%.

பிரிட்­ட­னில் 2019ல் கன்­சர்­வேட்­டிவ் கட்சி 650 தொகு­தி­களில் 365ல் வென்றது. 43.6 விழுக்­காட்டு வாக்­கு­க­ளை அந்தக் கட்சி பெற்­றது.

இந்­தி­யா­வில் 2019ல் பாஜக 542 இடங்­களில் 303ஐ கைப்­பற்­றி­யது. அந்­தக் கட்சி பெற்ற வாக்­கு­கள் 37 விழுக்­காடு.

மசெ­க­வுக்­கும் பாட்­டா­ளிக் கட்­சிக்­கும் வெற்றி

இந்த நாடு­களில் வெற்றி பெற்ற கட்சி­களின் செயல்­தி­றனை மசெ­க­வின் தேர்தல் செயல்­தி­ற­னு­டன் ஒப்­பிட்டுப் பார்க்­கை­யில், மசெக பெற்­றுள்ள வெற்றி தனிச்­சிறப்­பு­மிக்­கது என்­பதை நியா­ய­மான யாரும் ஒப்­புக்­கொள்­வார்­கள்.

தேர்­தல் முடி­வு­கள் மசெ­க­வுக்கு பேரிடரோ, சங்­க­ட­மான ஒரு தோல்­வியோ அல்ல என்­பது நிச்­ச­யம்.

அதே­வே­ளை­யில், பாட்­டா­ளிக் கட்சிக்கு இந்­தத் தேர்­தல் ஒரு வெற்றி. அந்­தக் கட்சி அல்­ஜு­னிட் குழுத்­தொகுதி, ஹவ்காங் தனித்ெ­தா­குதி ஆகிய தொகுதி­களில் மீண்­டும் வெற்றி பெறுமா என்று தேர்­தலுக்கு முன் சந்­தே­கம் நில­வி­யது.

ஆனால் அந்த இரண்டு தொகு­தி­களை­யும் தக்கவைத்­துக் கொண்டதோடு செங்­காங் குழுத்­தொ­கு­தி­யி­லும் அந்­தக் கட்சி வெற்றி பெற்­றது.

எதிர்த்­த­ரப்பு தலை­வர்

பாட்­டா­ளிக் கட்­சி­யின் தலை­மைச் செயலா­ளர் பிரித்­தம் சிங்கை நாடா­ளு­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக நிய­மிப்­பது என்று பிர­த­மர் லீ சியன் லூங் செய்­துள்ள முடிவை நான் பாராட்­டு­கி­றேன்.

எதிர்த்­த­ரப்பு தலை­வர் என்ற முறையில் திரு பிரித்­தம் சிங் தன் கட­மை­களை நிறை­வேற்ற ஏது­வாக ஊழி­யர்­கள் நிய­மிக்­கப்­ப­டு­வார்­கள், தேவையான வசதி களும் செய்துத்தரப்படும்.

திரு சிங்கை நாடா­ளு­மன்ற எதிர்த்­தரப்பு தலை­வ­ராக நிய­மித்து இருப்­ப­தன் மூலம் பாட்­டா­ளிக் கட்சி இங்கு நிலைத்­தி­ருக்­கும். வரும் ஆண்­டு­களில் அது இன்­னும் வலு­வாக வள­ரக்­கூ­டிய வாய்ப்பு இருக்­கிறது என்­பதை திரு லீ ஒப்­புக்­கொண்டு இருக்­கி­றார்.

சிங்­கப்­பூர் இரண்டு கட்சி நாடா­கப் பரி­ண­மிப்­பதை நாம் காணக்­கூ­டிய சூழல் உரு­வா­கக்­கூ­டும் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கருத்­தா­சி­ரி­யர் சுவா முவி ஹூங் தெரி­வித்து இருப்­பதை நான் ஒப்­புக்­கொள்­கி­றேன்.

அதோடு, இந்­தத் தேர்­த­லில் உண்­மையிலேயே யார் வெற்றி பெற்று இருக்­கி­றார்­கள் என்­று கேட்டால், சிங்­கப்­பூர்­தான் வெற்றி பெற்று இருக்­கிறது என்று கூறுவதே அதற்­கான சரி­யான விடை­யாக இருக்­கும் என சிங்­கப்­பூர் அனைத்­து­லக விவ­கா­ரக் கழ­கத்­தின் தலை­வர் சைமன் டே தெரி­வித்து இருப்­ப­தை­யும் நான் ஏற்­றுக்­கொள்­கி­றேன்.

2020 பொதுத் தேர்­த­லில் வென்­றது யார்? சிங்­கப்­பூர்­தான் வென்­றது.

தேர்­தல் நடந்த நேரம்

இரண்டு நெருக்­க­டி­களில் சிங்­கப்­பூர் சிக்­கிக்­கொண்டு இருக்­கிறது. ஒன்று சுகா­தார நெருக்­கடி. மற்­றொன்று பொரு­ளி­யல் நெருக்­கடி. இப்­ப­டிப்­பட்ட சூழ­லில் தேர்­தல் நடந்­தால் அது ஆட்­சி­யில் இருப்­ப­வர்­களுக்கே சாத­க­மாக இருக்­கும் என்று வழி­வ­ழி­யாக ஒரு கருத்து நில­வு­கிறது. ஆனால் இந்த நெருக்­கடி மூலம் மசெகவுக்கு நன்மை ஏற்­ப­டா­தது ஏன்?

கொவிட்-19 சூழ­லில் தேர்­தலை நடத்து­வது சந்­தர்ப்­ப­வா­தம் என்று வாக்­கா­ளர்­கள் பல­ரும் கரு­தி­யதே இதற்­கான காரணம் என்று நான் நினைக்­கி­றேன்.

கொவிட்-19 சூழ­லில் தேர்­தலை நடத்தி­னால் 2வது முறை­யாக கிரு­மிப் பரவல் தலை­யெ­டுத்­து­வி­டும் என்று பல மருத்து­வர்­கள் அச்­சம் தெரி­வித்திருந்­தார்­கள்.

தார்­மீக வழி­யில் நடப்­போம்

அர­சி­யல் கட்­சி­க­ளுக்கு வாக்­கா­ளர்கள் பல செய்­தி­களைத் தெரி­வித்து இருக்­கி­றார்­கள் என்றே நான் கரு­து­கி­றேன். தார்­மீக வழியைத் தேர்ந்­தெ­டுத்­துக்கொள்­ளுங்­கள். மாற்று வழி­யைத் தேடா­தீர்­கள் என்று வாக்­கா­ளர்­கள் அர­சி­யல் கட்­சி­களை வலி­யு­றுத்தி இருக்­கி­றார்­கள்.

எதிர்த்­த­ரப்­பி­னரை நசுக்­கு­வ­தைக் கைவிட்­டு­விட்டு பிரச்­சி­னை­களில் ஒரு­மித்த கவ­னம் செலுத்த வேண்­டும் என்­பது வாக்­கா­ளர்­கள் தெரி­யப்­ப­டுத்­தும் இரண்­டா­வது செய்தி.

இணை­யத் தேர்­தல்

நடந்து முடிந்த தேர்­தல்தான் சிங்­கப்­பூ­ரின் முத­லா­வது இணை­யத் தேர்­தல். கொவிட்-19 கார­ண­மாக பொதுக் கூட்­டங்­களை நடத்த முடி­ய­வில்லை.

வீட்­டுக்கு வீடு வரு­கை­கள், அங்­காடி நிலை­யங்­களில் வாக்­கா­ளர்­க­ளைச் சந்திப்­பது, இணை­யம் மூலம் பிர­சா­ரம், மெய்­நி­கர் உரை­யா­டல்கள், ஆகி­ய­வற்­றில் கட்­சி­கள் கவ­னம் செலுத்­தின.

இணை­யத்­தைப் பயன்­ப­டுத்தி எல்லா கட்­சி­க­ளுமே சிறப்­பா­கச் செயல்­பட்­டன என்­பதே என் கருத்து.

இதைப் பொறுத்­த­வரை­யில், குறிப்­பாக மசெ­க­வும் பாட்­டா­ளிக் கட்­சி­யும் ஆற்­ற­லு­டன் செயல்­பட்­டன.

மகளிர் சக்தி

2020 பொதுத் தேர்­த­லில் அரு­மை­யான ஓர் அம்­சம் என்­ன­வென்­றால் அதிக எண்­ணிக்­கை­யி­லான பெண் வேட்­பா­ளர்­கள் இடம்­பெற்­ற­து­தான். மொத்­தத்­தில் 39 பேர் பெண் வேட்­பா­ளர்­கள்.

தனித்­தொ­கு­தி­களில் களம் இறங்­கிய மசெக பெண் வேட்­பா­ளர்­கள் அதிக வாக்கு எண்­ணிக்­கை­யில் வெற்றி பெற்று இருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மேலும் பல மாதர்­கள் அர­சி­ய­லி­லும் நாடா­ளு­மன்­றத்­தி­லும் நுழை­வ­தைக் காண எனக்கு மகிழ்ச்­சி­யாக இருக்­கிறது.

ஒரு நாள் வரும். அப்போது சிங்­கப்­பூ­ருக்கு ஒரு பெண் பிர­த­ம­ராக இருப்­பார் என்­பதே எனது கனவு.

செங்­காங் குழுத்­தொ­குதி

செங்­காங் குழுத்­தொ­கு­தி­யில் பாட்­டாளிக் கட்சி வென்­றது பெரும் வியப்பு. இதற்­கான பதில் எனக்­குத் தெரி­ய­வில்லை.

செங்­காங் குழுத்­தொ­குதி புதிய ஒரு தொகுதி­யாக உரு­வாக்­கப்­பட்­டது. பெரும்­பா­லான வாக்­கா­ளர்­கள் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­களில் வசிக்­கி­றார்­கள்.

இளம் வாக்­கா­ளர்­கள், இளம் குடும்­பங்­கள் அதி­க­மாக இருக்­கும் பகுதி அது.

முதிய வாக்­கா­ளர்­க­ளை­விட இளம் வாக்­கா­ளர்­கள் வேறு­பட்ட உலக கண்­ணோட்­டத்தை, விருப்­பங்­க­ளைக் கொண்­டி­ருக்­கி­றார்­களா?

இதற்கு ஆமாம் என்­பதே எனது பதில்.

அரசாங்கம் அதி­கம் கலந்து ஆலோசிக்­கும் போக்கு­டன் இருக்­க­வேண்­டும் என்­றும் சட்­டாம்­பிள்­ளைத் தனத்­தைக் குறைத்­துக் கொள்ள வேண்­டும் என்­றும் இளம் வாக்­கா­ளர்­கள் விரும்­பு­கி­றார்­கள்.

சிங்­கப்­பூர், சீனர் அல்­லாத ஒரு­வரைப் பிர­த­ம­ராக ஏற்­றுக்­கொள்ள தயா­ராக இல்லை என்று கூறப்­ப­டு­வதை அவர்­கள் ஒப்­புக்­கொள்­ள­வில்லை.

ஏழ்மை, ஏற்­றத்­தாழ்வு அகல வேண்­டும் என்­றும் சிங்­கப்­பூர் இன்­னும் நியா­ய­மிக்­க­தாக இருக்க வேண்­டும் என்­றும் அவர்கள் விரும்­பு­கி­றார்­கள்.

சிங்­கப்­பூர் இன்­னும் பசு­மை­யாக வேண்டும் என்­பதும் அவர்­க­ளின் விருப்ப மாக உள்ளது.

வாக்­க­ளிப்பு மூலம் அவர்­கள் மசெக அர­சாங்­கத்­திற்குப் பல தக­வல்­க­ளைத் தெரி­வித்து இருக்­கி­றார்­கள். அவற்­றுக்கு மசெக செவி­சாய்க்­கும் என்­பதே எனது மனப்­பூர்­வ­மான நம்­பிக்கை.

அவற்றை ஒதுக்­கி­வி­ட­ாமல் திறந்த மன­து­டன் அர­சாங்­கம் பரி­சீ­லிக்­கும் என்று நான் நம்­பு­கி­றேன்.

இரண்டு அம்­சங்­களை மீண்­டும் குறிப்­பிட விரும்­பு­கி­றேன்.

2020 பொதுத் தேர்­தல் மசெ­க­வுக்கு கிடைத்த வெற்­றி­தான். அது, அந்­தக் கட்­சிக்குப் பேரி­டரோ, சங்­க­ட­மான தோல்வியோ அல்ல.

பாட்­டா­ளிக் கட்சி செங்­காங் குழுத்­தொ­கு­தி­யி­லும் வென்று இப்­போது அது நம்­பத்­த­குந்த எதிர்க்­கட்­சி­யாக அங்­கீ­கரிக்­கப்­பட்டு இருக்­கிறது என்­பது மற்­றோர் அம்­சம்.

இந்­தக் கட்சி எப்­போ­துமே சிங்­கப்­பூ­ருக்கு விசு­வா­ச­மாக இருந்து வரும் என்­றும் தனக்கு ஏற்­பில்­லாத விவ­கா­ரங்­களில் அது அர­சாங்­கத்தை எதிர்க்­கும் என்­றும் சிங்­கப்­பூ­ரர்­கள் எதிர்­பார்ப்­பார்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!