பயங்கரவாத வலையில் சிக்கிவிடாமல் இளையரைக் காப்போம்

பயங்­க­ர­வா­தம் எந்த வடி­வில் வந்­தா­லும் அதை ஆக்ககரமான எந்­தச் சமூ­க­மும் விரும்புவதில்லை. என்­றா­லும் மானிட இனத்­திற்குப் பெரும் கேடாக இருந்து வரும் பயங்­க­ர­வா­தத்தை உல­கில் முற்­றாக துடைத்தொழிக்க இன்னமும் இய­ல­வில்லை.

பயங்­க­ர­வாத, தீவி­ர­வாத நோக்­கத்­தைக் கொண்­ட­வர்­கள், அத்­த­கைய சித்­தாந்­தங்­க­ளைக் கடைப்­பி­டிப்­ப­வர்­கள், காலம் மாற­மாற தாங்­களும் காலத்­திற்கு ஏற்ப மாறிக்­கொண்டு புதிய புதிய பாணி­களில் தங்­க­ளு­டைய நோக்­கத்தை நிறை­வேற்ற முயன்று வரு­கி­றார்­கள்.

அது­வும் உல­கில் இணை­யச் சமூக ஊடகங்கள் அதிக அள­வில் புழக்­கத்­திற்கு வந்­த­தால் அத்­தகைய பேர்­வ­ழி­களுக்கு மிக­வும் கொண்டாட்டமாகி விட்டது. கவர்ச்சிகர­மான ஈர்ப்பு சக்­தி­யாக செயல்படும் இணை­யத்தை வெகு லாவ­க­மாக அவர்­கள் பயன்­ப­டுத்­திக்கொள்­கி­றார்­கள்.

இந்த முயற்­சி­யில் அவர்­கள் சம­யத்­தை­யும் விட்­டு­வைப்­பது கிடை­யாது. உல­கில் எந்த மூலை­மு­டுக்­கில் இருந்­தா­லும் ரக­சி­ய­மா­க­வும் பெரிய அள­வி­லும் கட்­ட­மைப்­பு­களை வெகு விரை­யில் ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளும் இணை­யச் சூழல் அவர்­களுக்­குப் பெரும் அனு­கூ­ல­மாக இருக்­கிறது.

முக்­கி­ய­மாக இளை­யர்­களை அவர்­கள் குறி வைக்­கி­றார்­கள். கள்­ளம்­ க­ப­ட­மின்றி, உள்­நோக்கம் எது­வு­மின்றி வளர்ந்து வரக்­கூ­டிய இளை­யர்­கள் அத்­தகை­யோ­ரின் வலை­களில் எளி­தில் சிக்கி விடுகிறார்­கள். கெட்ட நோக்­கத்­து­டன் அழிவு சக்தி­யா­கச் செயல்­படும் பயங்­க­ர­வாதப் பேர்­வ­ழி­கள், இளை­யரின் பல­வீ­னங்­க­ளைப் புரிந்­து­கொண்டு, வசி­யம் செய்­வ­து­போல் தந்­தி­ர­மாக அவர்­க­ளைத் தங்­கள் வலைக்­குள் மிக எளி­தில் கொண்­டு­வந்து விடு­கி­றார்­கள்.

இளை­யரும் அவர்­கள் போதிப்­பதை நம்­பி­விடு­கி­றார்­கள். தங்­க­ளுக்கு உள்­ளேயே தீவி­ர­வாத மனப்­போக்கை கொஞ்­சம் கொஞ்­ச­மாக வளர்த்துக் ­கொள்­கி­றார்­கள். அனைத்­துலக சமூக ஊடகங்­களில் கிடைக்­கக்­கூ­டிய இதர வகை தக­வல்­கள் எல்­லாம் அத்­த­கைய இளை­ய­ரின் சுய தீவி­ர­வாத மனப்­போக்­குக்கு உர­மாக அமைந்­து­வி­டு­கின்­றன.

கடை­சி­யில், அத்­த­கைய இளை­யர்­கள் தவறான வழி­யில் விழுந்து, சம­யம் போன்றவற்றைத் தவறாகப் புரிந்­து­கொண்டு வன்­செ­யல் என்­பது சரி­யான ஒன்­று­தான் என்ற ஒரு மன­ப்போக்கை படிப்­ப­டி­யாக பலப்­ப­டுத்­திக்கொள்­கி­றார்­கள்.

பயங்­க­ர­வாத, தீவி­ர­வாத வஞ்­ச­கர்­கள் வலை­களில் வச­மாக சிக்கி தாங்­கள் சீர­ழி­வ­தோடு, சமூ­கத்­தி­லும் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் அள­வுக்­குப் போய்­விடுவது இளை­யர்­கள் மட்டு மல்ல. ஆனாலும் பயங்­க­ர­வா­தப் பிடி­யில் இளையர்­ சிக்­கி­வி­டு­வது சமூ­கத்­திற்குக் கூடு­தல் கவ­லை­யா­கவே இருக்­கும் என்­ப­தில் ஐய­மில்லை.

இத்­த­கைய மிரட்­டலை சிங்­கப்­பூர் உள்­ளிட்ட உல­கின் பல நாடு­களும் சந்­தித்து வரு­கின்­றன.

சிங்­கப்­பூ­ரில் 2015ஆம் ஆண்டு முதல் உள்­நாட்­டுப் பாது­காப்­புச் சட்­டம் கையாண்ட 21க்கும் குறைந்த வய­துள்ள இளை­யர்­கள் ஒன்­பது பேர். அவர்­களில் ஆறு பேர் அந்­தச் சட்­டத்­தின்­கீழ் தடுத்து வைக்­கப்­பட்டனர். மூவ­ருக்­குக் கட்­டுப் பாட்டு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

ஈராக், சிரி­யா­வைத் தளமா­கக்கொண்டு செயல்­படும் ஐஎஸ்­ஐ­எஸ் அமைப்புக்கு ஆத­ர­வாக சிங்­கப்­பூ­ரி­லும் வெளி­யி­லும் ஆயுத வன்­செ­யல்­களில் ஈடு­படத் திட்­டம் போட்­டி­ருந்த 18 வயது பதின்ம வயதுப் பையன் தடுத்­து­வைக்­கப்­பட்டு இருப்­ப­தாக அண்­மை­யில் அறி­விக்­கப்­பட்­டது. அதை அடுத்து இந்த நில­வ­ரங்­கள் தெரி­ய­வந்­தன.

பயங்­க­ர­வா­தத்­தைக் கையாள மிகக் கடு­மை யான சட்­ட­திட்­டங்­கள் தேவை. அத்­தகைய சட்­டங்­கள் சிங்­கப்­பூ­ரில் நடப்­பில் உள்ளன. பாது­காப்பு அமைப்­பு­கள் 24 மணி நேர­மும் முழு விழிப்­புடன் இருந்து அய­ராது பாடு­பட்டு வரு­கின்­றன.

சம­ய போத­னை­க­ளைத் திருத்­திச் சொல்­லிக் கொடுத்து வன்­செ­யல்­களை நியா­யப்­ப­டுத்­தும் சமூக விரோ­தி­களை அவை மிக அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­கின்­றன.

தீவி­ர­வாத மனப்­போக்­கு­ கொண்டவர்­கள் தடுப்­புக்­கா­வ­லில் வைக்­கப்­ப­டு­கி­றார்­கள். எதிர்­கா­லத்­தில் அவர்­கள் வன்­செ­யல் பக்­கம் போவதைத் தடுப்­ப­தோடு, மன­ரீ­தி­யில் அவர்­களை நல்­வ­ழிப்­படுத்தி அவர்கள் நல்­வாழ்க்கை வாழ்­வ­தற்கு தடுப்­புக்­கா­வல் ஏற்­பாடு உத­வு­கிறது.

பயங்­க­ர­வா­தம் என்­பது ஓர் அழிவு சக்தி. அது எந்த ஒரு சம­யத்­தை­யும் சார்ந்­தது அல்ல. தீவி­ர­வாத சித்­தாந்த வலை­யில் யாரும் சிக்­கிக்­கொள்ள­லாம் என்ற நிலைப்­பாட்டை சிங்­கப்­பூர் கொண்டு உள்­ளது. இந்த அணு­கு­முறை சிங்­கப்­பூ­ருக்கு மிகச் சிறந்த வெற்­றியைக் கொடுத்­து­ வ­ரு­கிறது.

பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான அர­சாங்­கத்­தின் இந்த அணு­கு­மு­றைக்­குப் பேரா­த­ரவு இருப்­ப­தால் மொத்­தத்­தில் தேசிய மீன்­தி­றன் பல­ம­டை­கிறது.

இஸ்­லாம் என்ற பெய­ரில் வன்­செ­யல்­களை அரங்­கேற்ற இடமே கிடை­யாது என்று சிங்­கப்பூரின் ஆக உய­ரிய இஸ்­லா­மிய சம­யத் தலைவரான முஃப்தி அண்­மை­யில் அறி­வித்­தார். இது சிங்­கப்­பூ­ரின் அதி­கா­ர­பூர்வ அணு­கு­முறையை மேலும் பலப்­ப­டுத்­து­வ­தாக இருக்­கிறது.

நாட்டில் எந்த அளவுக்குக் கடுமையான சட்டங்கள் இருந்தாலும் ஒரு­வர் ரகசியமாக தீவிர­வாத சித்­தாந்தங்­களுக்­குச் செவி­சாய்த்து, சுய தீவி­ர­வாத மனப்­போக்கை வளர்த்து­கொள்ளும் வரை அந்­தச் சட்­டங்­க­ளால் எதை­யும் செய்ய இய­லவில்லை என்­பது தெ­ளிவு.

அதா­வது, ஒரு­வர் அத்­த­கைய மன­நி­லைக்கு வந்த பிறகே தடுப்­புக்­கா­வல் அம­லா­கிறது, அம­லாக முடி­யும். ஆகை­யால் தீவி­ர­வாத மனப்­போக்கு உரு­வா­வ­தைத் தொடக்­கத்­தி­லேயே தடுக்க வகை செய்­யும் ஒரு சூழ்­நி­லை­யை மேலும் பலப்­ப­டுத்த வேண்டும் என்­பதே நம் இலக்­காக இருக்க வேண்­டும். இதைச் சாதிக்க சிங்­கப்­பூர் சமூ­கம் ஒன்­றா­கச் சேர்ந்து செயல்­ப­ட­வேண்­டும்.

அனைத்­து­லக சமூக ஊடகங்­களில் இடம்­பெறக்­கூ­டிய கெட்ட நோக்க வன்செயல் பிர­சாரங்­களில் யாரும் சிக்­கி­விடாதபடி தடுக்க வேண்­டும்.

தீவிர சித்­தாந்த மனப்­போக்குத் தொடர்­பில் ஆக அண்­மை­யில் வெளி­யான தக­வல்­கள், சிங்­கப்­பூ­ரர்­களை மேலும் ஒன்றிணைத்து பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான நம்­மு­டைய அரணை மேலும் பலப்­ப­டுத்­தும் என்று நம்­பு­வோம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!