பின்னணி பாடகர் வாணி ஜெயராம் மறைவு

பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் காலமானார். அவருக்கு வயது 78. 

கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் அவர் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

1971ஆம் ஆண்டு வெளிவந்த ‘குட்டி’ (Guddi) என்ற இந்தித் திரைப்படத்தில் வசந்த் தேசாயின் இசை அமைப்பில் ‘போலே ரே பப்பி’ என்ற பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகராக வாணி ஜெயராம் அறிமுகமானார். அந்தப் பாடல் ரசிகர்களிடையே மகத்தான வரவேற்பை பெற்றது. 

அதனைத் தொடர்ந்து பல மொழிகளில் இனிமையான பாடல்களை பாடி ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் வாணி ஜெயராம். 

‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ ‘சங்கராபரணம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மானஸ ஸஞ்சரரே’, ‘ஸ்ருதிலயாலு’ எனும் படத்தில் இடம்பெற்ற ‘ஆலோகயே ஸ்ரீ பாலகிருஷ்ணம்’ ஆகிய பாடல்களுக்காக அவர் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றார்.

அண்மையில் அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 

திரையுலகினர், ரசிகர்கள் ஆகியோர் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!