தமன்னாவுடன் தினமும் சண்டையிட்ட கார்த்தி

புத்துணர்ச்சியுடன் காணப்படு கிறார் கார்த்தி. 'பருத்தி வீரன்' வெளிவந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. 'கொம்பன்' வெளியாகி, வெற்றி பெற்று சரியாக ஓராண்டு ஆகப்போகிறது. இப்போது 'தோழா' வெற்றியால் மனிதர் முகத்தில் மீண்டும் உற்சாகம் தென்படுகிறது. கதைத் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்துகிறாராம். கதைக் களம் நன்றாக இருந்தால்தான் நடிக்க ஒப்புக்கொள்கிறாராம். நாகார்ஜுனாவோடு நடித்த அனுபவம்? "பொதுவாக நான் இரு நாயகர்கள் உள்ள கதைகளை ஏற்பதில்லை. ஆனால் வம்சி சொன்ன கதையைக் கேட்டதுமே அதில் நடிக்க வேண்டுமெனத் தோன்றியது. அதிலும் மற்றொரு நாயகனாக நாகார்ஜுனா அண் ணன் நடிப்பது தெரிந்ததும் எதுவும் பேசாமல் கால்‌ஷீட் கொடுத்துவிட்டேன். நாகார்ஜுனா இப்போது எனக்கு நல்ல நண்பர். மூத்த சகோதரர்."

மூத்தவர்களும் இளையர்களும் இப்படி இணைவது நல்லதல்லவா? "நிச்சயமாக... தொழில், வரு மானம் என்பதையெல்லாம் கடந்து இலவசமாக, உருப்படியான அறிவுரைகள் கிடைக்கும். ஒருமுறை ஹைதராபாத்தில் நாகார்ஜுனாவுக்குச் சொந்தமான அன்னபூர்ணா ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடைபெற்றது. படப் பிடிப்பு இல்லாதபோது, நான் சைக்கிள் ஓட்டுவேன். என்னை கவனித்துக்கொண்டே இருந்தார்.

'தோழா' படத்தில் கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!