ஆர்யாவின் திருமணம் சமுதாயத்துக்கு நல்லதாம்

ஆர்யாவுக்குத் திருமணம் நடந் தால் அது இந்த சமுதாயத்துக்கு நல்லது என்று ஆர்யாவை கலாய்த்திருக்கிறார் விஷால். நட்சத்திர கிரிக்கெட் போட் டியை முன்னிட்டு சில வாரங்களாக முன்னோட்ட நிகழ்ச்சிகளை சன் தொலைக்காட்சி ஒளிபரப்பி வரு கிறது. நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்காக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நடிகர்கள் ஒன்றிணைந்து நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்து கின்றனர். வருகின்ற 17ஆம் தேதி இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று இப்போட்டிக்கான 8 அணிகளையும் அறிமுகம் செய்து வைத்தனர். மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை சிவா, குஷ்பு இருவரும் தொகுத்து வழங்கினர்.

விஷாலின் மதுரை காளைஸ் அறிமுகமாகும்போது ஆர்யாவின் திருமணம் எப்போது நடக்கும் என்று கார்த்தி விஷாலிடம் கேட்டார். அதற்கு விஷால் "ஆர்யாவின் திருமணம் நடந் தால் இந்த சமுதாயத்துக்கு நல்லது. கிசுகிசுவின் ராஜாவாக அவன் வலம் வருகிறான். விரை வில் அவனுக்குத் திருமணம் நடைபெறும்," என பதில் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!